Posts

Showing posts from July, 2008

சுவரஸ்யமான மனிதர்...!

அவருடைய கதைகள் உலகப் புகழ் பெற்றவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படித்து இன்புறத்தக்க இனிய சுவை கொண்டவை. ஒவ்வொரு கதையிலும் ஒரு மறைபொருள் தத்துவம் உள்ளடங்கிக் கிடக்கும்.
அந்தத் தத்துவம் மனித குலத்தை மேம்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும், தவறைத் திருத்தவும் கூடிய வல்லமை கொண்டவை. ஆட்டுக்குட்டி அருவி நீரை அருந்திவிட்டதாகப் பழி கூறி, அதைக்கொன்று தின்ற ஓநாய் கதை.
ஒருமுறை சுண்டெலியைக் கொல்லாமல் விட்ட சிங்கத்திற்குக் கைமாறாக, வேடனின் வலையில் சிங்கம் சிக்கிக் கொண்டபோது, வலையைத் தன் பற்களால் கடித்து விடுவித்த சுண்டெலி கதை.
திராட்சைக் குலையைத் தின்ன விரும்பி எம்பி எம்பிக் குதித்துப் பார்த்து, அது கிடைக்காமல் போகவே, “சீ, ச்சீ, இந்தப் பழம் புளிக்கும்” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு வீடு திரும்பிய நரியின் கதை,
இதுபோன்ற பல கதைகளை உலகின் எந்த நாட்டு, எந்த மொழிக் குழந்தைகளும் அறிந்திருப்பார்கள். உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவி நிற்கும். அந்தக் கதைகளின் வலிமைதான் என்ன!
கிறிஸ்தவர்களின் வேத நூலான பைபிளுக்கு அடுத்தபடியாக உலகில் ஏராளமானோரால் படிக்கப்பட்டு வருபவை அவரது கதைகளே! முந்நூறுக்கும் மேற்பட்…

“கின்னஸ் புத்தகம்”

“கின்னஸ் புத்தகம்” எப்படி உருவானது தெரியுமா உங்களுக்கு?
1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலை என்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.
எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை.
அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும் விடை தேடினார். பலன்தான் இல்லை.
இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்…

அணுகுண்டு விவகாரம் உண்மை என்ன!!!?

நான் படித்ததை அப்படியே கொடுத்துள்ளேன்.. அனைவருக்கும் பயன்படுமே என்று..நாள்: 1974ம் ஆண்டு 18ம் தேதி காலை 7 மணி...
இடம்: ராஜஸ்தானின் ஜெய்சால்மீர் மாவட்டத்தின் ஒரு பாலைவனப் பகுதி.
எல்லாம் முடிந்துவிட்டது.. பட்டனை தட்ட வேண்டியது தான் பாக்கி, ஆனால், 'அந்த இடத்திலிருந்து' வெளியேற வேண்டிய அணு விஞ்ஞானி வி.எஸ்.சேத்தியின் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. விரைகின்றன ராணுவ வாகனங்கள்.. ஜீப்பையும் சேத்தியையும் வேக வேகமாக அங்கிருந்து வெளியேற்றுகின்றனர்.
இடம்: டெல்லி. காலை 8 மணி.
பிரதமர் இந்திரா காந்தி தனது அலுவலகத்தில் மகா டென்சனுடன் தொலைபேசி அருகிலேயே காத்திருக்கிறார். இன்னும் 'தகவல்' வரவில்லையே என்ற கவலை ரேகைகள் அவர் நெற்றியில்..
மணி 8.05.. தொலைபேசி ஒலிக்கிறது.. அவசரமாய் எடுக்கிறார் இந்திரா. மறுமுனையில் அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா, Madam, 'Buddha has finally smiled'.
மகிழ்ச்சியில் இந்திரா கண்கலங்க, 'இந்தியா அணு குண்டு சோதனை' என்ற செய்தி உலகெங்கும் பரவுகிறது. அந்த நாளி்ல் புத்தர் சிரித்திருக்கலாம்.. ஆனால், உலகம் அதிர்ந்தது.
இந்தியாவா..? அணு குண்டா..? நம்ப முடியாமல் உறைகின்றன நாடுகள…

ந‌ம‌து ந‌ண்ப‌ன்!!!!

கடந்த சனிக்கிழமை இரவு எனது ஒரு installation work ‍ ஐ முடித்து விட்டு சக ஊழியர்களுடன் உணவு உண்ண சென்று கொண்டிருந்தேன், hotel ‍ க்கு 10 அடி முன் உள்ள ஒரு வழிப்பாதையைக் கடந்து செல்ல முனையும் போது எதிரில் ஒரு போக்குவரத்து அதிகாரி வண்டியில் வந்து கொண்டிருந்தார், நான் oneway‍யில் சென்று கொண்டிருந்ததால், நின்றுவிட்டேன் , அந்த வண்டியும் நின்றது, நான் அருகில் சென்றேன் ( அவர்களின் பார்வையே நம்மை அழைக்கும்) அவர் உடனே மிக மரியாதையாக் " டேய் , இங்க வா!" ( இத்தனைக்கும் நான் அவரை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்) அருகில் சென்றதும், " வாயை ஊது" என்றார், (அதாவது நான், மது அருந்தியிருந்ததால் தான் அவரை பார்த்து பயந்து நின்றேன் என்ற நினைப்பில் என்னே ஒரு psychological approach, உண்மையில் எனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை) நானும் ஊதினேன், அவர், மீண்டும் மிக மரியாதையாக் " ஒழுங்கா ஊதுடா, ஒங்கி அறைந்தேனா தெரியும்" என்றார் நானும் செய்தேன், பிறகு அவர் " சரி, சரி , போ" என்று கூறி விட்டு சென்று விட்டார். எனக்கு அன்று இரவு முழுவதும் எனது உற‌க்கமேயில்லை.. என்ன செய்யா கேட்டால் &q…