Posts

Showing posts from September, 2008

பெட்ரோல் போடும்போது..!!!

Image
கார் / பைக் வச்சிருக்கிரீங்களா ? ஒரு நிமிஷம்...... ஹோட்டல், ஆட்டோ , கடைகள் இவைகளில் எங்கு சென்றாலும் Keep the change சொல்லக்கூடிய ஆளா நீங்க? அப்ப உங்களுக்கு இந்த பதிவு அல்ல. இது சாதாரண மிடில் கிளாஸ் ஆட்களிலிருந்து, "எவனோ ஒருவன் " மாதவன் ரேஞ்சு ஆசாமிகளுக்கும்தான்

என்னதான் ஆயில் விலை குறைந்தாலும் பெட்ரோல் பங்க்ல மட்டும் விலையே குறையில. அதனால எல்லாரும் அதிக மைலேஜ் உள்ள வண்டியா பாத்து பாத்து வாங்கறாங்க. பொதுவா.. பைக் வச்சிருந்தீங்கன்னா, 100க்கு, 200க்கு பெட்ரோல் போடுவோம்(நம்மள மாதிரி) , அதே கார் வச்சிருக்கிறவர்கள் எங்காவது நீண்ட தூர பயணம் என்றால் நேராக பெட்ரோல் பங்க் சென்று டாங்க்கை நிரப்பி கொண்டு சொல்கிறார்கள்.

இப்படி நிரப்பும் போது அளவு சொல்லுவதில்லை மாறாக பெட்ரோல் போடும் ( Loading arm ) பைப்பில் ஒரு Sensor switch இருக்கும். பெட்ரோல் டாங்க் நிரம்பி பெட்ரோல் அந்த பைப்பை தொடும்போது அந்த sensor switch கண்டு உடனடியாக Valveவை மூடிவிடும்.

இப்போது கிழே உள்ள படத்தை கவனியுங்கள். எப்போதும் பங்க்கில் உள்ள டாங்கிலிருந்து எப்போதும் இரண்டு பைப் வரும்.

1. pumping line எனப்படும் பெட்ரோல் போடும…

வீழும் கோபுரங்கள்.

வீழும் கோபுரங்கள்

.
டிவி செய்திகளில் நியூயார்க் நகர இரட்டைகோபுரங்கள் விமானங்களால் தகர்க்கப்பட்டு புகை சூழ அவை விழுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் கோபுரங்கள் அப்படியே நின்றிருக்க உள்ளிருக்கும் பில்லியன் டாலர் நிறுவனங்கள் பொலா பொலாவென உதிர்வதை பார்த்திருக்கின்றீர்களா? இப்போதெல்லாம் வால் ஸ்டிரீட்டில் இது வாரம் தோறும் நிகழும் நிகழ்வாகிவிட்டது. விண்மீன்கள் விழுவதைப்போல நேற்று வரை ஜொலித்துக் கொண்டிருந்த நிதி நிறுவனங்கள் இப்போது காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு சொல்ல ஒன்றா இரண்டா?. அருமையான மென்பொருள் தீர்வுகளை வழங்க நம் மென்பொருள் வல்லுனர்கள் தயார்தாம், ஆனால் அதனை பயன்படுத்த அல்லது பயன்படுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் பெஸிமிஸ்டாய் சொன்னால் டெக்னாலஜி நிறுவனங்களுக்கும் தொலைவு அத்தனை வெளிச்சமாயில்லை.

1929 ஆம் ஆண்டுகளில் எட்கர் கேய்ஸ் (Edgar Cayce) என்பவர் தூங்கியவாறே வரும் காலத்தில் நடக்கப்போவதை புட்டு புட்டு வைத்துக்கொண்டிருந்தார். மிகப்பெரிய நிதிச்சிக்கல் ஒன்று வரப்போகின்றது. (a great disturbance in financial circles) அவரவர் பணத்தை மூட்டை கட்ட…