Posts

Showing posts from 2009

மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள்??? நிஜமா !!!

மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள்
பெண் விடுதலை, பெண் விடுதலை என்ற பெண்ணூரிமை மீட்டெடுப்பு போராட்டத்தின் விளைவாக தற்போது பெண்கள் மிகப்பரவலாக அனைத்து துறைகளிலும் காணப்படுகின்றனர்.ஆணுக்கு பெண் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் வண்ணமாகவும் செயல்படுகின்றனர்.ஆனால், இப்படி செயல்படும் பெண்களில் பெரும்பான்மையானவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது?

ஆண்களைப்போல உடை உடுத்துவதும், நெஞ்சை நிமித்தி நடப்பதும் தான், பெண் சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர் போலும். மகாபாரத பாஞ்சாலியைப்போல எல்லா நேரத்திலும் கூந்தலை முடியாதே வருகின்றனர்.கிராமத்துப் பெண்களைக் காட்டிலும் நகரத்து பெண்களிடம்தான் இந்தப்போக்கு மிதமிஞ்சி இருக்கிறது.எதனை வலியுறுத்த இவர்கள் இப்படி செயல்படுகின்றனர்?

தற்போது, குறிப்பாக படித்த கல்யாணமாகாத பெண்களிடம் அதிக மாற்றங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தங்களது கணவர் எப்படி இருக்க வேண்டும், திருமணத்திற்குப் பிறகு எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும், வீட்டு அலுவல்களை எப்படியெல்லாம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஒரு நீண்ட பட்டியலையே முன்வைக்கின்றனர். இதனை பட்டியல் என்…

ஜப்பானிய பயிரோவியங்கள்!

Image
ஜப்பானிய விவசாயிகள் படைக்கும் பயிரோவியங்கள்!


ன்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை ஜப்பானியர்கள் ஒவ்வொருவருக்குள் புதிய சிந்தனையும் சாதனை செய்யும் மனப்பான்மையும் வேரோடி கிடக்கிறது.
விவசாயிகள் என்ன செய்யவேண்டும்? அவர்கள் பாடு அரிசி, கோதுமை, கரும்பு பயிரிட்டு மூன்று போகம் விளைவித்து காட்டிவிட்டு போகவேண்டியதுதானே. அதுதான் இல்லை. நாங்களும் வித்தியாசமாக ஏதாவது சாதிப்போம் என்று ஜப்பானில் உள்ள இனகாடேட் கிராம மக்கள் கிளம்பினர்.
சுமார் 2500 ஏக்கர் நிலத்தில், வெவ்வேறு நிறங்களில் நெல் பயிரிட்டு அதில் பல்வேறு உருவங்களை வரவழைக்கத் தொடங்கினர். இது நடந்தது 1993 இல். இந்த பயிரோவியங்களில் நெப்போலியன், இவாகி மலை, பாரம்பரிய ஜப்பானியர், சுனாமி அலை என பயிர் உருவங்கள் பல பிம்பங்கள் காட்டுகின்றன.
2000ஆம் ஆண்டில், ஜப்பானின் புகழ்பெற்ற மரச்சிற்பியான ஷராக்கு உள்ளிட்ட கலைஞர்களின் அரிய படைப்புகளைக் கூட பயிரோவியங்களாக இவர்கள் உருவாக்கி திகைக்க வைத்தனர்.
கணினி காலம் வந்ததும் அதற்கேற்ப இக்கிராம மக்களும் மாறினர். கணிணி தொழில்நுட்ப உதவி மூலம் கச்சிதமாக, வேண்டிய அளவில் இந்த பயிர் உருவங்களை உருவாக்குகிறார்கள். பல்வேறு அனிமேஷன் உ…

வெடிக்கும்பொழுது ....

வெடிய சொல்லிட்டு வெய்யுங்கயா... ஹும்...

மதம்,மொழி,நாடு,இனம் எல்லாவற்றையும் கடந்த ஒரு உண்மை

Image
97 வயது மகிழ்ச்சி!
நமது அருமை நண்பர் 'அது ஒரு கனாக்காலம் ' சுந்தர ராமன் அவர்கள் எனக்கு மிகவும் உத்வேகம் தரும் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.
ஆங்கிலத்தில் இருந்த அந்த வாழ்க்கைச் செய்தியை உடனடியாக எல்லோருடனும் பகிர்ந்து கொண்டால் அனைவருக்குமே பயனளிக்கும் என்ற எண்ணத்தில் அதனுடைய தமிழ் வடிவத்தை இங்கே தருகிறேன்.

97 வயது நான்கு மாதங்கள் ஆகிறது மேலே நீங்கள் படத்தில் பார்க்கும் 
ஜப்பானிய டாக்டருக்கு.
உலகிலேயே நீண்ட வருடங்கள் மருத்துவப் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்களில் அவரும் ஒருவர்.மருத்துவக் கல்வி பயில்விக்கும் கல்வியாளராகவும் இருப்பவர்.
அவரது பெயர் Dr.Shigeagi Hinohara. தமிழில் அதை நான் அச்சிட்டால் இப்படி வருகிறது .டாக்டர்.ஷிகியேகி ஹிநொஹர.(அந்த அரும் பெரும் முதியவர் என்னை மன்னிப்பாராக)
டோக்கியோவில் இருக்கும் St.Luke அகில உலக மருத்துவமனையில் 1941 ம வருடத்தில் இருந்து அவரது மாயக் கரங்கள் பட்டுக் குணமானோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
இரண்டாம் உலகப் போரில் சிதிலமடைந்த டோக்கியோ நகரில் உலகத் தரம் வாய்ந்த ஒரு மருத்துவ மனையையும் ,மருத்துவக் கல்லூரியையும் நிறுவ வேண்டும் என்ற தனது…

வாய் விட்டுப் கேளுங்கள் . மனம் விட்டுப் பேசுங்கள்

உறவுகளானாலும் சரி , நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன . பலம் பெறுகின்றன . மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும் , சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன . பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன ; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன .
என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது .
ஒரு இராணுவ வீரனும் , ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள் . மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது . அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி . இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள் . போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா ?
ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன