Posts

Showing posts from January, 2009

பார்சி இன மக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

எனது குஜராத்தி நண்பர் ஒருவர் பார்சி இன மக்கள் இந்தியா வந்து சேர்ந்த கதை எனக்குக் கூறினார். அதில் ஒரு சிறந்த வாழ்க்கைப் பாடம் அடங்கி உள்ளது.

அதாவது, சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர், பார்சி இன மக்கள், தமது சொந்த மண்ணான பாரசீகத்தில் (ஈரான் ) இருந்து வெளியேற நேரிட்டது. அவர்கள், இந்தியாவில் அடைக்கலம் புகுவதற்காக கப்பலில் பயணம் செய்து , குஜராத் கரையோரம் இந்திய (குஜராத்)மன்னரிடம் அனுமதி கோரி காத்து இருந்தனர்.

அப்போது, குஜராத் மன்னர், தம் மண்ணில் ஏற்கனவே மக்கள் தொகை அதிகம் , மேலும் யாருக்கும் இடம் இல்லை என்று குறிப்பால் உணர்த்துவதற்காக ஒரு பால் நிறைந்த பாத்திரத்தை கப்பலுக்கு கொடுத்து அனுப்பினார்.

பார்சி மக்களோ , அப்பாத்திரத்தில் சிறிது சர்க்கரை இட்டு , மன்னருக்கே திருப்பி அனுப்பினார் .

அதன் குறிப்பானது . "நாங்கள் தனித்து தெரிய மாட்டோம் . பாரமாகவும் இருக்க மாட்டோம் . தங்களுடன் கலந்துவிடுவோம் . மேலும் தங்கள் வாழ்வுக்கும் சுவை கூட்டுவோம் ".


இந்த நூதனமான பதிலால் மகிழ்ச்சி அடைந்த மன்னர் , அவர்களை இந்தியாவிற்குள் (இந்திய கலாச்சாரத்தை பின் பற்ற வேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகளுட…

எளியோரையும் மதிப்போம் !

சமீபத்தில் ஒரு சிறு கதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, ஒரு ஏழைச் சிறுவன் ஒரு பெரிய ஐஸ்க்ரீம் பார்லருக்கு செல்கிறான். அங்கு இருக்கும் ஒரு வெய்ட்டரிடம் ஒரு பிஸ்தா ஐஸ்க்ரீம் விலை கேட்கிறான். ஒரு குறிப்பிட்ட விலையை வெய்ட்டர் சொன்னதும் தன்னிடமுள்ள சிறு பையில் உள்ள காசுகளை எண்ணி பார்க்கிறான். பின்னர், இதை விட குறைவாக விலை உள்ள ஐஸ்க்ரீம் வேண்டும் எனவும் அதன் விலை என்ன என்றும் கேட்கிறான். வெய்ட்டருக்கு மிக எரிச்சல். மிகப் பெரிய கஸ்டமர்கள் காத்து கொண்டிருகிறார்கள். இந்த சிறு பையன் தனது நேரத்தை வீணடிக்கிறானே என்று.ஒரு வழியாக , அந்த பையனின் அடக்க விலையில் ஒரு ஐஸ்க்ரீம் கிடைக்கிறது. விட்டது தொல்லை என்று எண்ணும் வெய்ட்ட்ர் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு அந்த பையன் சென்ற பிறகு அவனுடைய தட்டைப் பார்க்கிறார். அதில் ஐஸ்க்ரீம் விலையோடு அவருக்கான டிப்சும் இருக்கிறது. அந்த பையனிடம் இருந்த தொகையை கொண்டு அவனால் பிஸ்தா ஐஸ்கரிமே வாங்கி இருக்க முடியும் என்றாலும் கூட, வேயட்டருக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கதினாலேயே அந்த பையன் குறைந்த விலையில் உள்ள ஐஸ்க்ரீம் வாங்கி இருக்கிறான் என்ற…

இது ஒரு (வாழ்க்கை) சமையல் குறிப்பு -copied

Image
மூன்று சம அளவு பாத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றிலும் நீரை ஊற்றுங்கள். ஒரு பாத்திரத்தில் கேரட், இன்னொரு பாத்திரத்தில் முட்டை மற்றும் கடைசி பாத்திரத்தில் கொஞ்சம் காஃபி பொடி போடுங்கள். அனைத்து பாத்திரங்களையும் சுமார் பதினைந்து நிமிடங்கள் சூடு படுத்துங்கள். என்னடா இது? புது வகை சமையல் குறிப்பாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இதில் ஒரு சுவையான வாழ்க்கை தத்துவம் அடங்கி உள்ளது.

எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கை பாதை எப்போதுமே எளிமையானதாகவும் சந்தோசமானதாகவும் அமைந்து விடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் கடும் போட்டிகளையும், சில சமயங்களில் பயங்கர விரோதங்களையும் கூட சந்திக்க வேண்டி இருக்கிறது. உதாரணமாக, புதிய அலுவலகம், புதிய தொழில், புதிய உறவுகள் மற்றும் புதிய இருப்பிடங்களில் ஏற்படும் சில கசப்பான அனுபவங்கள். இத்தகைய கடினமான சூழல்களில் நாம் கொதி நீரில் வீழ்ந்து கிடப்பது போல துடித்துப் போகிறோம். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களையும் அவற்றை ஏற்படுத்தும் சுற்றத்தாரையும் (சமூகம்) ஒவ்வொருவரும் மூன்று வகையாக எதிர்கொள்ளலாம்.

முதல் வகையானவர்கள் கேரட் போன்றவர்கள். இவர்கள் சுற்றத்தாருடன் போராடி பிரச்சினை…