Posts

Showing posts from March, 2009

அரசியல் கிரிமினல்கள் வேண்டாம்!!

கருத்து சுதந்திரம் என்பது பெயரளவில் மட்டும் உள்ளது. அரசியல்வாதிகளைப் பற்றிக் கருத்துத் தெரிவித்தாலே விளைவுகள் எப்படியிருக்கும் என்பது யாவருக்கும் தெரியும். நிலைமை இவ்வாறிருக்க, அவர்களைப் பற்றி யாரிடம் கேட்பது? இத்தளத்திடம் கேட்கலாம். வீட்டுக்கு ஆசிடோ, ஆட்டோவோ வராது!

பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள், நடத்தைகளைப் பற்றி அறிய உதவும் இணைய தளம். நல்ல முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள தளமும் கூட. சமீபத்திய செய்திகளும் கிடைப்பது , கூடுதல் சிறப்பு.
http://www.nocriminals.org
கிரிமினல்கள் வேண்டாம்! இந்தத் தளத்தின் நோக்கம், வரும் பொதுத்தேர்தலில் கட்சிகள் கிரிமினல் பின்னணி உடைய வேட்பாளர்களை நிறுத்தக் கூடாது என்று நிர்ப்பந்திப்பது. தகவல் தொடர்புக்கு எத்தனை வழிகள் உண்டோ அத்தனை வழிகளிலும் இந்தச் செய்தியை சென்றடையச் செய்வது.
2004 பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 20 சதவிகித வேட்பாளர்கள் மேல் வழக்கு இருந்தது. சில வட மாநிலங்களில், குற்றவாளிகள்தான் ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கிறார்கள். பெரும்பாலான மாநிலங்களின் நிலை இதுவே. இதுபோன்ற ஏராளமான விவரங்கள் கிடைக்கின்றன. 
கிரிமினல் வேட்பாளர்களை நிறுத்துவதில் தமிழகத…

குழந்தைகளா ?? தொழிலாளர்கள் ??

Image
யார்? 4 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறார்கள் கூலிக்கான உழைப்பில் ஈடுபடுவோரை குழந்தைத் தொழிலாளர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான இந்திய அரசியல் சட்டம்: 24 வது பிரிவு-14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை எந்த ஒரு தொழிற்சாலைகளை அல்லது சுரங்கத்திலோ அல்லது வேறு எந்தவிதமான ஊறு விளைவிக்கும் வேலையிலோ பணியமர்த்தக் கூடாது. 45 வது பிரிவு- 14 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்குதலை அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டிலிருந்து 10 வருட காலக்கட்டத்தில் உறுதிப்படுத்தும் வகையில் அரசு முயற்சிகள் எடுத்தல் வேண்டும். 39 வது பிரிவு - இ - தொழிலாளர்களின் உடல்நலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது, ஆண்கள் பெண்கள் மற்றும் பிஞ்சுக் குழந்தைகள் அவமதிக்கப்படாமல் பாதுகாப்பது, அவர்களின் வயது மற்றும் உடல்வலிமைக்கு பொருத்தமில்லாத வேலைகளில் பொருளாதார நிர்பந்தத்திற்காக வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துவதைத் தடுப்பது ஆகியவற்றை உறுதிப்படுத்தும் கொள்கையை அரசு வகுக்க வேண்டும். 39 வது பிரிவு - எஃப் - ஆரோக்கியமான முறையிலும், சுதந்திரமான சூழ்நிலையிலும், கண்ணியத்துடனும் வளர்வத…

வாழ்க இந்தியா!!( அரசியல்வாதியும், பணக்காரர்களும் மட்டும்)

இந்தியா 15வது மக்களவைக்கான் தேர்தலை எதிர்நோக்கியுள்ள சமயத்தில் தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்க்காக அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகள் பிரச்சாரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செலவுகள் ரூ10,000 கோடியை தாண்டும் என செய்திகள் வருகின்றன. பல அரசியல் கட்சிகள் தேர்தலில் செய்யும் செலவுகள் கோடிக்கணக்கில் தேர்தல் ஆணையம் எத்தனை சட்டம் போட்டாலும் செலவுகளை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. பெரும்பாலன அரசியல் கட்சிகள் தேர்தல் செலவை முதலீடாகவும் அரசதிகாரம் கிடைத்தபின்பு மக்களுக்கு செல்லவேண்டிய பணத்தை அறுவடைசெய்துகொள்கிறார்கள். இந்தியாவில் கட்சிகளுக்கு கிடைக்கும் நிதியின் முக்கிய ஊற்று நாட்டின் பெருமுதலாளிகள். சமீபத்தில் FICCI மற்றும் ASSOCHEM போன்ற கூட்டமைப்புகள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தேர்தல் நிதி சம்பந்தமாக கடிதம் எழுதியுள்ளனர். அதாவது தாங்கள் கட்சிகளுக்கு அளிக்கின்ற தேர்தல் நிதி வெளிப்படையாக இருக்கவேண்டுமாம் அதனால் அமெரிக்காவைப் போன்று Polical Action Commitee (PAC) ஏற்படுத்தி அதன் மூலம் கட்சிகள் பெறும் வாக்குவிகித அடிப்படையில் நிதியை பிரித்துத்தரப்படவேண்டுமாம்.

முதலில் இந்திய ஜனநாயகத்தின் மீது…

வாழ்க்கையின் பொருள் !!!

வாழ்க்கையின் பொருள் பற்றி சமீபத்தில் நான் படித்த ஒரு கதை இங்கே.

ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்த சில மாணவர்கள், படித்து முடித்து சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கல்லூரியில் சந்திக்கின்றனர். அப்போது, கல்லூரி வாழ்க்கையைப் போல வெளி உலக வாழ்க்கை சந்தோசமானதாக இல்லை என்றும் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கின்றது என்றும் அலுத்துக் கொள்கின்றனர்.

அப்போது அங்கு வந்த அவர்களது முன்னாள் பேராசிரியர் அவர்களை தன் வீட்டிற்கு தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். சுவையில் சிறந்த அவர் வீட்டு தேநீர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது.

அவரது வீட்டில் தேநீர் பல்வேறு விதமான கோப்பைகளில் பரிமாறப் படுகின்றது. சில கோப்பைகள் சாதாரணமானவை, சில கோப்பைகள் அழகானவை, சில கோப்பைகள் விலை உயர்ந்தவை, வேறு சிலவோ பிரத்யேகமாக கலை அழகோடு வடிவமைக்கப் பட்டவை.

அந்த மாணவர்கள், அழகற்ற கோப்பைகளை தவிர்த்து விட்டு அழகிய கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்புகின்றனர். கலை வடிவம் மிக்க தேநீர் கோப்பைக்காக அவர்களிடையே சிறிய போட்டி கூட நடக்கிறது.

ஒருவழியாக, தமக்கான கோப்பையை தேர்வு செய்து, மாணவர்கள் அனைவரும் தேநீர் அருந்தும் போது…

நான் கடவுளா??!!

இல்லை , நான் எழுதப் போவது திரைப்பட விமர்சனம் அல்ல.கடவுள் நம்பிக்கை ,ஜோதிடம் ,மதம் சார்ந்த நம்பிக்கைகள் பற்றி ஆளாளுக்கு பதிவுகளை போட்டு பயங்கரமாய் விவாதம் செய்கிறபோது நான் மட்டும் தேமேயென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் கருத்து கந்தசாமி ஆகி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். என்ன நான் கொஞ்சம் லேட். கடவுள் ,மதம் என்பது எல்லாம் தனி நபர் நம்பிக்கை என்றெல்லாம் ஜல்லியடிக்கப் போவதில்லை.இது ஒரு குழப்பமான விஷயம்.இருக்குப்பா என்று சொன்னால்சில பேர் படித்து விட்டு போவார்கள் ,இல்லை என்று சொன்னால் போதும் நிறைய பேர் படிப்பதோடு மட்டுமல்லாமல் கமென்ட் பண்ணுவார்கள் என்று நினைத்து இந்த பதிவை போடவில்லை (நம்ம்புங்க சார்). கடவுள் நம்பிக்கை என்பதை அடிப்படையாக வைத்து மக்களை மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்கள்,ஆஸ்திகர்கள்,நாஸ்திகர்கள்,ஆஸ்திகநாஸ்திகர்கள் (அதாவது ரெண்டுங்கெட்டான்). விபரம் தெரியாத வரை எல்லோரும் ஆஸ்திகர்களே,கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் சில பேர் நாஸ்திக கரை ஒதுங்குவார்கள் தைரியமாக,பலர் ஆஸ்திகர்கள்,என்னைப் போன்று நட்டாத்தில் நின்று கொண்டு எந்த பக்கம் ஒதுங்குவது என்று பேந்தப் பேந்த முழிப்பவ…