Posts

Showing posts from April, 2009

கம்பெனிகளின் உண்மை நிலை...(அ) உண்மை கதை...??

Image

ஒரு மந்திர வார்த்தை !!!! நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்!

ஒரு மந்திர வார்த்தை சொல்லித் தருகிறோம்... அதை ஒருமுறை உச்சரித்தால் போதும்... நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்! என்ன அந்த மந்திர வார்த்தை என்ற பரவசம் பொங்குகிறதா... இதோ குறித்துக்கொள்ளுங்கள்...
திட்டமிடல்!
'உங்கள் முதல் சம்பளத்தில் எத்தனை ரூபாயைச் சேமிப்புக்கு ஒதுக்கினீர்கள்?' என்று நாற்பதைக் கடந்த வயதில் இருக்கும் பலரிடம் கேட்டால், எத்தனை பேரிடம் உறுதியான, தெளிவான பதில் இருக்கும்? குத்துமதிப்பாகக் கூடச் சொல்லமுடியாமல் தடுமாறுபவர்கள் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும்.
போனது போகட்டும்... இனியாவது தெளிவாகத் திட்டமிடுவோம்.
வருமானம் எவ்வளவு... செலவு எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியும்
சூழ்நிலையில் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் எவ்வளவு ஒதுக்கி வைக்கவேண்டும் என்பதையும் தீர்மானித்தாக வேண்டும். இன்றைக்கு முப்பது வயதில் இருக்கும் ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது என்றால் அந்தக் குழந்தையைக் கல்லூரியில் சேர்க்கும்போது அவருக்கு ஐம்பதை நெருங்கும் வயதாகி இருக்கும். அன்றைக்கு லட்சங்கள் தேவைப்படும் என்றால் எங்கே போகமுடியும். இப்போதே திட்டமிட்டுக்கொள்ளலாம் அல்லவா!


அதற்கான முயற்சிதான் இது.


ஒற்றை வரியில் …

யோசிச்சு தேர்வு செய்யுங்கள்!!!

ஒரு M.P யின் சம்பளமும் அரசு சலுகைகளும்.மாத சம்பளம் – Rs 12,000
மாத அலுவலக செலவு – Rs 14,000
மாத தொகுதி செலவு – Rs 10,000
பயண செலவு – Rs 48,000 (Rs 8/ km)
விடுதி – MP Hostel – இலவசம்
மின்சாரம் – 50,000 units இலவசம்
தொலைபேசி - 1, 70,000 calls இலவசம்
தினசரி கூலி – 500 (during parliament meets)
ரயில் பயணங்கள் – இலவசம் (unlimited) – 1st A/C
விமானம் – 40 இலவச பயணங்கள் (P.A / மனைவிக்கும்)
ஒரு மாத செலவு - 2.66 லட்சங்கள்
ஒரு வருடத்துக்கு ஆகுர செலவு - Rs.32, 00,000/-
5 வருடங்களுக்கு - Rs. 1, 60, 00,000/-

534 முட்டாள்களுக்கு 5 வருடங்களுக்கு ஆஹும் செலவு – Rs. 8,54,40,00,000/- அதாவது 855 கோடி.
இப்படி தான் வேர்வை சிந்தி உழைக்கும் மக்களின் வரி பணம் வீணாகிறது. விலைவாசி rocket மாதிரி போகுது. ஆதலினால் ஓட்டு போடுங்கள். தயவு செய்து உங்கள் வாக்கு உரிமையை உபயோக படுத்துங்கள்.ஒரு 5000 சம்பள வேலைக்கே ஒரு முதலாளி எவ்வளவு யோசிச்சு முடிவு பண்றார். இவ்வளவு சம்பளம் வாங்கும் M.P ஐ வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் ஆகிய நீங்கள் யோசிச்சு தேர்வு செய்யுங்கள். 
source : http://chuttikurangu.blogspot.com/2009/04/mp.html

My Disney World.....hi...hi!!!

My Disney World Entry .....

வாக்களியுங்கள்!!! அல்லது வாக்களியுங்கள் 49 (ஒ)

Image
இப்போது தேர்தல் நேரம் என்பதால் இந்த பதிவை வெளியிடுவது மிகவும் அவசியம் என கருதுகிறேன். நம் இந்திய அரசியல் சட்டம் நன்றாகவே உள்ளது. ஆனால் அவை நமக்கு சரிவர தெரியாததே இன்றைய அத்தனை குளருபடிக்கும் காரணம். திரு சேஷன் அவர்கள் தேர்தல் ஆணையராக இருந்தபோதுதான் தேர்தல் ஆணையம் என்றால் என்ன? அதற்கு இவ்வளவு அதிகாரம் உண்டா? என நமக்கெல்லாம் தெரிந்தது.திரு சேஷன் அவர்களுக்கு முன்பிருந்த அத்தனை தேர்தல் ஆணையர்களும் ஆளும் கட்சியின் கை பாவைகளாகவே இருந்தனர்.தன் அதிகாரங்களை பயன்படுத்த தொடங்கியதுமே எல்லா அரசியல்வாதிகளுமே ஒன்று சேர்ந்து திரு சேஷன் அவர்களின் செயல்பாடுகளை தடுக்க எண்ணி, அரசியல் சட்டத்தை மாற்றி மேலும் இரண்டு ஆணையர்களை நியமித்து தங்களின் அதி புத்திசாலிதனத்தை நிருபித்தனர்.

இன்றும் தேர்தல் சம்பந்தமான ஒரு நல்ல சட்டம் இருக்கிறது. அதை இப்போது பார்க்கலாம்.
சட்டம் 1969 பிரிவு "49-0". இந்த சட்டத்தின் படி ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் நல்லவர்கள் இல்லையெனில் அவர்களை களையெடுக்க வாக்காளர்களான நமக்கு அதிகாரம் உண்டு. உதாரணமாக எதாவது ஒரு தொகுதியை எடுத்துக்கொள்வோம். அத்தொகுதியில் போட்டியி…

MLM - பல்லடுக்கு வியாபாரம் - கவனம் தேவை...!!!???

அலுவலகத்தில் வேலை செய்யும் அல்லது தனிப்பட்ட முறையில் தெரிந்த நண்பர், ஒரு நாள் திடீரென்று போன் செய்து, "என்ன நீங்க நம்ம வீட்டுப் பக்கமே வர மாட்டீங்கறீங்க என்று விசாரித்துவிட்டு, நம்ம வீட்ல ஒரு கெட் டு கெதர் வெச்சிருக்கேன். ஞாயித்துக்கெழம காத்தால ஒரு பத்து மணிக்கா வாங்களேன் நெறய இன்ட்ரெஸ்டிங்கான விஷயம் இருக்கு" என்று சொன்னாலோ...

அல்லது...

அதே போன்ற ஒரு நண்பர், அதே ஃபோன்.. "ஒரு எக்ஸெலென்ட் பிசினெஸ் ஆப்பர்ச்சூனிட்டி. இந்த பிஸினெஸ்ல ஜெயிச்சவர் ஒர்த்தரு நமக்காக ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்காரு கூட்டிட்டு வரட்டுமா" என்று சொன்னாலோ...

அந்த நண்பர் 99 சதவிகிதம் பல்லடுக்கு வியாபாரத்திற்குள் (Multi level marketing) இருக்கிறார். உங்களையும் உள்ளே கொண்டு போக விழைகிறார் என்று அர்த்தம்.

கிட்டத்தட்ட 10 வருடங்களாக இதில் ஈடுபட்ட பலரையும் பார்த்த அனுபவங்களை சொல்லவே இந்த இடுகை.

எல்லா மல்டி லெவெல் மார்கெட்டிங் கம்பெனிகளும் ஃப்ராட் என்பதோ, அதை செய்யும் நபர்கள் எல்லாம் ஏமாற்று பேர்வழிகள் என்பதோ நிச்சயமாக என் கருத்து அல்ல.

பெரும்பாலானோருக்குள் இருக்கும் எளிதாக காசு பார்க்கும் ஆசையை தூண்டிவிட்ட…

ஒரு சென்ட் பாட்டில் திருட்டு.. குடும்பத்துடன் சிறை..!!

சென்னையைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் ஒருவரின் மனைவி, ஒரு செண்ட் பாட்டிலைத் திருடிய குற்றத்திற்கான தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக, அடுத்தடுத்துத் தொடந்து செய்த பல தவறுகளால், இப்போது அவரது மொத்தக் குடும்பத்திற்கும், பத்தாண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் யூசுஃப் சயிது. இவர் தனது மனைவியான மும்தாஜ் மற்றும் 16 வயது மகள் மெஹ்னாஸ் ஆகியோருடன் விடுமுறையைக் கழிப்பதற்காக அயல்நாடுகளுக்கு உல்லாசச் சுற்றுலா சென்றுள்ளார். பல நாடுகளிலும் உல்லாசமாகப் பொழுதைக் கழித்த இந்தக் குடும்பத்தினர், இறுதியாக இந்தியா திரும்பும் முன்னர் பாங்காங் சென்றுள்ளனர்.

பாங்காங்கையும் சுற்றிப் பார்த்து விட்டு, சென்னை திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளனர் அந்தக் குடும்பத்தினர். விமானத்திற்காகக் காத்திருக்கும் நேரத்தில் விமான நிலையத்தில் உள்ள கடைகளில் சென்று பொருட்கள் வாங்க விரும்பியுள்ளார் மும்தாஜ்.

விமான நிலையத்தில் இருந்த ஒரு கடையில் பொருட்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த மும்தாஜின் மனதைக் கொள்ளை கொண்டது ஒரு அழகிய செண்ட் பாட்டில். ஆனால் அதைப் பணம்…