Posts

Showing posts from August, 2009

வாய் விட்டுப் கேளுங்கள் . மனம் விட்டுப் பேசுங்கள்

உறவுகளானாலும் சரி , நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன . பலம் பெறுகின்றன . மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும் , சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன . பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன ; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன .
என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது .
ஒரு இராணுவ வீரனும் , ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள் . மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது . அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி . இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள் . போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா ?
ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன

ஓசைப்படாமல் வரும் சர்க்கரை நோயும் , இதய நோயும் !!!

Image
சர்க்கரை நோயும் சரி, இதய நோயும் சரி, ஓசைப்படாமல் தான் வரும். எப்போது வரும், யாருக்கு வரும் என்பதே சொல்ல முடியாது. பல சிம்பிளான அறிகுறிகளை டாக்டர்கள் சொல்லத்தான் செய்கின்றனர். ஆனால், பலரும், "வரும் போது வரட்டும்;பார்த்துக் கொள்ளலாம்' என்று கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.


ஷுகர்! ஒரு விளக்கம்:


உடலுக்கு க்ளூக்கோஸ் என்பது, எரிசக்தி போல; பைக்குக்கு பெட்ரோல் போடுவதுபோல!


ஆம், க்ளூக்கோஸ் , உடலுக்கு தேவையான ஒன்று தான். ஆனால், அதுவே அதிகமானாலோ ஆபத்து தான். கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது தான் சர்க்கரை வியாதி உருவாகிறது.


இனி படத்தை பாருங்கள்:


1. சாப்பிடும் போது உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் செல்லும் உணவு, உள்ளே நொறுக்கப்பட்டு க்ளூக்கோஸ் ஆக பிரிகிறது.


2. உணவில் இருந்து பிரிந்த க்ளூக்கோஸ், ரத்தத்தில் சேர்கிறது. ரத்தம் மூலமாக , செல்களுக்கும், மற்ற உறுப்புகளுக்கும் க்ளூக்கோஸ் செல்கிறது.


3. இன்சுலின் - உடலில் உள்ள கணையத்தில் உள்ள சுரப்பி தான்இன்சுலினை தடையில்லாமல் சுரக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மிகாமல் கட்டுப் படுத்தும் பணி இதனுடையது.


4. ரத்தத்தில் எப்போதெல்லாம் க்ளூக்கோஸ் அளவு அதிகம…

உடல் பருமன்!!! குறைக்க ???

Image
இதய பாதிப்பு, சர்க்கரை நோய்க்கு முக்கிய அறிகுறியே, உடல் பருமன் தான். சிறிய வயதிலேயே குண்டாகி விடும் பலருக்கு, இளம் வயதை அடையும் போதே பாதிப்பு ஆரம்பித்து விடுகிறது. நீங் கள் நாற்பது வயதை எட்டுபவரா? உங்கள் இடுப்பு சுற்றளவு 35 அங்குலம் அல்லது 90 சென்டிமீட்டரை எட்டி விட்டதா? அப்படியானால், கண்டிப்பாக உஷாராகி விடுங்கள். சர்க்கரை வியாதிக்கு அடிப்படையான உடல் பருமனை அளவிடுவதில், இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் வேறுபாடு உண்டு. இந்தியாவில் 90 செ.மீ., என்பது தான் உடல் பருமன்; சர்வதேச அளவில் இந்த அளவு 112 செ.மீ.,ஆக உள்ளது.


அடிவயிற்று கொழுப்பு!:
உடல் பருமனை அளவிடுவதில் ஒரு முக்கிய விஷயத்தை டாக்டர்கள் கவனத்தில் கொள்கின்றனர். தொந்தி பெருத்தாலும், கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதாகவோ, சர்க்கரை வியாதி வரும் என்றோ கூற முடியாது.ஆனால், அடிவயிறு பெருத்தால் தான் ஆபத்து. முதலில், வளையம் போல கோடு விழும். அதன்பின், வெளிப்படையாக அடிவயிறு பெருத்திருப்பது தெரியும். இதை தெரிந்து கொண்டால், உடனே டாக்டரிடம் போய் சோதனை செய்து கொள்வது மிக நல்லது.இந்தியர்களை பொறுத்தவரை, அடிவயிற்று கொழுப்பு அளவை வைத்தே, அவர்களுக்கு பாதிப்ப…

ஆசிரியர் பயிற்சிக்கு தடை.. மாணவர்களே உஷார்..

Image
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கவுன்சிலிங் முடிந்தும் "சீட்'கள் நிரம்பாத நிலையில், ஜூலை 31க்கு பின், மாணவர்களை சேர்க்க அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன.ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர விரும்பாததால், பல நிறுவனங்களில் இந்த ஆண்டு பாதியளவு கூட "சீட்'கள் நிரம்பவில்லை. ஏராளமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் துவங்கியதும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளிகளிலும் பி.எட்., ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர விரும்பாததற்கு முக்கிய காரணங்கள்.
தற்போதுள்ள நிலையில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தான் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதுவும் பெண்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. எனவே, அதிக ஆர்வம் ஏற்படவில்லை. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு கவுன்சிலிங் மூலம் நிரப்பும் பணி, கடந்த 24, 25ம் தேதிகளில் முடிவடைந்தது. இதில் பல நிறுவனங்களில் பாதியளவு கூட அரசு "சீட்'கள் நிரம்பவில்லை. அதே நிலை தான் நிர்வாக இடங்களுக்கும் உள்ளது.
இந்ந…