Posts

Showing posts from 2011

வெயில் குளிர்வித்த மாலை!!

எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ் இலக்கிய உலகின் முக்கிய ஆளுமை... இப்படித்தான் ஆஆரம்பிக்க என்ணினேன், ஆனால் அவரை சந்தித்த பின் அவரது எளிமை, நெருக்கம் இத்தேவையை குறைத்து விட்டது.
செப். 24,25 தேதிகளில், சேர்தள நண்பர்களின் அழைப்பின் பேரில் வந்திருந்த எஸ்.ரா ( எழுத்தாளர் என்கிற ஒரு கட்டத்துக்குள் அவரை நிறுத்த முடியவில்லை, அவர் ஆளுமை எல்லா தளத்திலும் விரவி உள்ளது ) சரி அவரை சந்திக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது. இங்கேதான், தகுதியை அதிர்ஷ்டம் வென்றது, அவரை சந்தித்தது நிச்சயமாக ஒரு அதிர்ஷ்டம்தான்.
முதல் நாள் (செப்.-24), அவரை சுக்ரீஸ்வரர் ஆலயத்தில் பார்த்த பொழுது எவ்விதமான பரபரப்பும் இன்றி காணப்பட்டார். அதுவே ஆச்சரியம். இங்கே திருப்பூரில் பதற்றம் மட்டுமே பார்த்துப் பழகிய கண்கள் விரிந்தன அவர் அமைதியால்.
பிறகு தொடங்கிய உரையாடலில், என்போன்ற கற்றுகுட்டிகளுக்கும், இலக்கிய பரிச்சயம் உள்ளவர்களுக்கும் ஒரே குரலில் பதிலளித்து சமநிலை பேணிய போது விழிகள் விரிந்தே இருந்தது ஆச்சரியத்தால். இரவு உணவுக்கு பிறகு பிரியும்போழுது கூட, ஏதோ நெடுநாளைய நண்பரை பிரிவது போல் இருந்த்து.
இரண்டாம் நாள் (செப்.-25) விடிந்ததும், என் அகமுடை…

Athiradi

Image

ஸ்பெக்ட்ரம் - மக்களுக்கு "வடை" போனது எப்படி?

நண்பர்களே!!!

தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி
ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச
ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம்
நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார்
முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய
காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில்
பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார்,
இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம்
சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம்
இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும்
செய்யவும்.

மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார் நம் முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை
பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள்
பயன்படுத்தும் அளவி…