ந‌ம‌து ந‌ண்ப‌ன்!!!!

கடந்த சனிக்கிழமை இரவு எனது ஒரு installation work ‍ ஐ முடித்து விட்டு சக ஊழியர்களுடன் உணவு உண்ண சென்று கொண்டிருந்தேன், hotel ‍ க்கு 10 அடி முன் உள்ள ஒரு வழிப்பாதையைக் கடந்து செல்ல முனையும் போது எதிரில் ஒரு போக்குவரத்து அதிகாரி வண்டியில் வந்து கொண்டிருந்தார், நான் oneway‍யில் சென்று கொண்டிருந்ததால், நின்றுவிட்டேன் , அந்த வண்டியும் நின்றது, நான் அருகில் சென்றேன் ( அவர்களின் பார்வையே நம்மை அழைக்கும்) அவர் உடனே மிக மரியாதையாக் " டேய் , இங்க வா!" ( இத்தனைக்கும் நான் அவரை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்) அருகில் சென்றதும், " வாயை ஊது" என்றார், (அதாவது நான், மது அருந்தியிருந்ததால் தான் அவரை பார்த்து பயந்து நின்றேன் என்ற நினைப்பில் என்னே ஒரு psychological approach, உண்மையில் எனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை) நானும் ஊதினேன், அவர், மீண்டும் மிக மரியாதையாக் " ஒழுங்கா ஊதுடா, ஒங்கி அறைந்தேனா தெரியும்" என்றார் நானும் செய்தேன், பிறகு அவர் " சரி, சரி , போ" என்று கூறி விட்டு சென்று விட்டார். எனக்கு அன்று இரவு முழுவதும் எனது உற‌க்கமேயில்லை.. என்ன செய்யா கேட்டால் " அவர் பாவம் எத்தனை tension‍ ல் தினமும் இருப்பார்" என்ற பதில் வருகிறது. டென்ஷனில் எல்லொரிடமும் அவர் இப்படித்தான் நடப்பாரா , மேலதிகாரியிடமுமா!,ஆமாம் எனில், அவர் நல்ல மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது, இது போல பொதுமக்களை தொல்லை செய்வானேன்.. இந்த லட்சணத்தில் "காவல் துறை உங்கள் நண்பன்" என்று தம்பட்டம் வேறு, இவர்கள் யாருக்கு நண்பர் என்பது சிதம்பர ராகசியம்..! எல்லாம் காலக்கொடுமை வேறு என்ன சொல்ல‌

Comments

  1. நண்பரே! நல்ல முயற்சி, அருமையான பதிவுகள், வாழ்த்துக்கள்....
    please remove the word verification from the comments.

    ReplyDelete
  2. தர்மா தங்கள் வருகைக்கு நன்றி!! தாமதமான பின்னூட்டத்திற்கு பொறுத்தருளவும்!

    ReplyDelete
  3. அய்யா !
    இதை எங்கே இருந்து copy பண்ணினீர்கள் ?
    எங்கேயோ படித்த மாதிரி இருக்கிறதே !

    ReplyDelete
  4. தாங்கள் வருகைக்கு நன்றி!!

    இது எனது சொந்த அனுபவம் தான்.. இதை லக்கி லுக்கின் போலீஸ்காரர்கள் பற்றிய ஒரு பதிவிற்கு பின்னூட்டம் அளித்தேன்.. பிறகு நாமே ஒரு பதிவாக போடுவமே என்ற எண்ணத்தில் இட்டதுதான்...

    ReplyDelete
  5. http://girirajnet.blogspot.com/2008/07/blog-post_28.html
    ஆமாம் மேலே கண்ட கிரியின் பதிவில் உள்ள பின்னூட்டம் அது .
    அதை எழுதியதும் நீங்கள் தானா?

    ReplyDelete
  6. அமாம் பாஸ்கர், அதுவும் அடியேன் தான்!!..

    ReplyDelete

Post a Comment

கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!

use tamileditor.org for post you comments in TAMIL.