About The Author

பார்க்க !! கேட்க!! படிக்க !! ரசிக்க!! சிந்திக்க!! (முடிந்தளவு) Welcome to My Blog

Get The Latest News

Sign up to receive latest news

Thursday, December 24, 2009

மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள்??? நிஜமா !!!

மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள்
பெண் விடுதலை, பெண் விடுதலை என்ற பெண்ணூரிமை மீட்டெடுப்பு போராட்டத்தின் விளைவாக தற்போது பெண்கள் மிகப்பரவலாக அனைத்து துறைகளிலும் காணப்படுகின்றனர்.ஆணுக்கு பெண் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் வண்ணமாகவும் செயல்படுகின்றனர்.ஆனால், இப்படி செயல்படும் பெண்களில் பெரும்பான்மையானவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது?

ஆண்களைப்போல உடை உடுத்துவதும், நெஞ்சை நிமித்தி நடப்பதும் தான், பெண் சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர் போலும். மகாபாரத பாஞ்சாலியைப்போல எல்லா நேரத்திலும் கூந்தலை முடியாதே வருகின்றனர்.கிராமத்துப் பெண்களைக் காட்டிலும் நகரத்து பெண்களிடம்தான் இந்தப்போக்கு மிதமிஞ்சி இருக்கிறது.எதனை வலியுறுத்த இவர்கள் இப்படி செயல்படுகின்றனர்?

தற்போது, குறிப்பாக படித்த கல்யாணமாகாத பெண்களிடம் அதிக மாற்றங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தங்களது கணவர் எப்படி இருக்க வேண்டும், திருமணத்திற்குப் பிறகு எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும், வீட்டு அலுவல்களை எப்படியெல்லாம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஒரு நீண்ட பட்டியலையே முன்வைக்கின்றனர். இதனை பட்டியல் என்று கூறாது ஷரத்துக்கள் என்று கூறுவது தான் மிகச்சரியாக இருக்கும். திருமண வணிக ஒப்பந்த ஷரத்துக்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு தைப் போன்றுதான் நடந்துகொள்ள வேண்டும் என்பது அருவருக்கத்தக்கது. உதாரணமாக, தற்போது பெண்கள் அதிகம் வலியுறுத்துவது, “ நானும் சம்பாதிக்கிறேன், அதனால் வீட்டு வேலைகளை அவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்பதுதான். மேலோட்டமான பார்வையில் இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியாது, ஆனால், உற்றுநோக்கும் போதுதான் இதிலுள்ள கடுமை புரியும். யார் எந்த வேலையை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்து செயல்படுவதற்கு பெயர் திருமணமா?

தன் அன்பு மனைவி கஷ்டப்படுவதை எந்த கணவன்தான் பொறுத்துக்கொள்வான்? இதனை ஏன் இவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? அப்படியே அவர் புரிந்துகொள்ளாவிட்டாலும், உங்கள் அதீத அன்பில் அவர் வழிக்குவந்து விடுவாரன்றோ! அதைவிடுத்து திருமணத்திற்கு முன்பே ஷரத்துக்களை முன்மொழிவது ஏனோ?

மாட்டின் பல்லைப்பிடித்துப்பார்ப்பதைப் போல பார்க்கின்றனர். பலர் மத்தியில் காட்சிப்பொருளைப் போல நிற்கவைத்து பார்க்கின்றனர் என்று கூப்பாடு போட்டார்களே, இவர்கள் எத்தகைய மணமகனை எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா? இதோ அந்த பட்டியல்.

 1.. உயர்கல்வி நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும். முதுநிலை படித்திருந்தால் முன்னுரிமை.
 2.. தன்னைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும்
 3.. தங்கள் ஊரிலேயே/மாநிலத்திலேயே இருக்க வேண்டும்
 4.. அழகான, நகைச்சுவைமிக்க மற்றும் கடவுள் பக்தியுடையவராக இருக்க வேண்டும்.
 5.. பயனுள்ள பொழுதுபோக்கு கொண்டவராக, எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவராக இருக்க வேண்டும்
 6.. வீட்டு வேலைகளை பங்கீட்டுக்கொள்பராக இருக்க வேண்டும்
 7.. இரண்டு அல்லது மூன்று வயது மட்டுமே வித்தியாசம் இருக்க வேண்டும்......
இப்படி அந்த பட்டியல் ஒரு முடிவிலியாக சென்றுகொண்டே இருக்கிறது. மேற்கூறிய பட்டியலை பார்க்கும்போது, இவர்கள் யாவரும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியைதான் எதிர்பார்க்கின்றனர்.ஆனால், இவர்களுக்கெல்லாம் ஒன்றை ஞாபகப்படுத்துவது நம் கடமை. அந்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கூட, தன் மனைவியை சந்தேகித்து, கர்ப்பிணி பெண்ணான அவளை தனியே காட்டிலிட்டு வந்தவன்.ஆனால் நாங்கள் அப்படியல்ல. இதயத்தில் வைத்து தாங்குபவர்கள்.உயிராகிவிட்டவளை உள்ளளவும் வைத்து போற்றுபவர்கள்.

திருமணம் என்பது பொதுவாகவே பெண்களுக்கு அன்பையும் பாதுகாப்பையும் அளிக்கவல்லது, அதேபோல ஆண்களுக்கு இன்னொரு தாயினை அடையாளம் காட்டுவது” என்று காலம்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், படித்த பெண்களில் பலர், தங்களுக்கு பணப்பாதுகாப்பு அளிப்பவருக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். பணத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது கல்லைக்கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதற்கு சமம்.

பெருவாரியான பெண்கள் இப்படி மாறிவிட்டிருந்தாலும், ஆண்கள் இன்னமும் அதே இருபதாம் நூற்றாண்டு ஆண்களாகவே தொடருகின்றனர். குடும்பபாங்கான பெண்ணாக இருக்க வேண்டும், காலை எழுந்தவுடன் வாசலில் கோலமிட்டு தன்னை வரவேற்க வேண்டும், வருமானத்தை அறிந்து அதற்கேற்ப குடும்பத்தை நடத்திச் செல்பவளாக, நல்ல மருமகளாக, தன் தேவையறிந்து நடந்துகொள்பவளாக........ என்று இன்னமும் அதே பழைய பஞ்சாங்கமாகவே இருக்கின்றனர். ஆண்களே, அவர்கள் ஒளியின் வேகத்தில் பயணிக்கிறார்களாம். நாம், அவ்வளவு வேகமாக பயணிக்க வேண்டியதில்லை.ஆயினும், குறைந்தபட்சம் இருபத்தோராம் நூற்றாண்டுக்காவது வருவோமாக.



மின்னஞ்சலில் வந்தது. 
»»  read more

Wednesday, October 21, 2009

ஜப்பானிய பயிரோவியங்கள்!


ஜப்பானிய விவசாயிகள் படைக்கும் பயிரோவியங்கள்!
paddy-field-murals.jpg

ன்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை ஜப்பானியர்கள் ஒவ்வொருவருக்குள் புதிய சிந்தனையும் சாதனை செய்யும் மனப்பான்மையும் வேரோடி கிடக்கிறது.
விவசாயிகள் என்ன செய்யவேண்டும்? அவர்கள் பாடு அரிசி, கோதுமை, கரும்பு பயிரிட்டு மூன்று போகம் விளைவித்து காட்டிவிட்டு போகவேண்டியதுதானே. அதுதான் இல்லை. நாங்களும் வித்தியாசமாக ஏதாவது சாதிப்போம் என்று ஜப்பானில் உள்ள இனகாடேட் கிராம மக்கள் கிளம்பினர்.
சுமார் 2500 ஏக்கர் நிலத்தில், வெவ்வேறு நிறங்களில் நெல் பயிரிட்டு அதில் பல்வேறு உருவங்களை வரவழைக்கத் தொடங்கினர். இது நடந்தது 1993 இல். இந்த பயிரோவியங்களில் நெப்போலியன், இவாகி மலை, பாரம்பரிய ஜப்பானியர், சுனாமி அலை என பயிர் உருவங்கள் பல பிம்பங்கள் காட்டுகின்றன.
2000ஆம் ஆண்டில், ஜப்பானின் புகழ்பெற்ற மரச்சிற்பியான ஷராக்கு உள்ளிட்ட கலைஞர்களின் அரிய படைப்புகளைக் கூட பயிரோவியங்களாக இவர்கள் உருவாக்கி திகைக்க வைத்தனர்.
கணினி காலம் வந்ததும் அதற்கேற்ப இக்கிராம மக்களும் மாறினர். கணிணி தொழில்நுட்ப உதவி மூலம் கச்சிதமாக, வேண்டிய அளவில் இந்த பயிர் உருவங்களை உருவாக்குகிறார்கள். பல்வேறு அனிமேஷன் உருவங்களைக்கூட பயிர்களை வைத்து படைக்கிறார்கள் என்பது ஆச்சரியமூட்டும் செய்தி.

இந்த அதிசயங்களைக் காண ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இனகாடேட் கிராமத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். இதனால் கிராமத்தின் வருமானமும் கணிசமான அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
உயிரோவியங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஜப்பானியரின் பயிரோவியங்களை காணுங்கள்.
paddy-field-murals-1.jpg
paddy-field-murals-2.jpg
paddy-field-murals-3.jpg
paddy-field-murals-4.jpg

paddy-field-murals-5.jpg
paddy-field-murals-6.jpg
paddy-field-murals-7.jpg








Source : http://www.tamilvanan.com/content/2009/10/21/japanese-farmers-create-paddy-field-murals/
»»  read more

Monday, October 12, 2009

வெடிக்கும்பொழுது ....

வெடிய சொல்லிட்டு வெய்யுங்கயா... ஹும்...

»»  read more

Wednesday, September 02, 2009

மதம்,மொழி,நாடு,இனம் எல்லாவற்றையும் கடந்த ஒரு உண்மை


97 வயது மகிழ்ச்சி!


நமது அருமை நண்பர் 'அது ஒரு கனாக்காலம் ' சுந்தர ராமன் அவர்கள் எனக்கு மிகவும் உத்வேகம் தரும் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.
ஆங்கிலத்தில் இருந்த அந்த வாழ்க்கைச் செய்தியை உடனடியாக எல்லோருடனும் பகிர்ந்து கொண்டால் அனைவருக்குமே பயனளிக்கும் என்ற எண்ணத்தில் அதனுடைய தமிழ் வடிவத்தை இங்கே தருகிறேன்.

97 வயது நான்கு மாதங்கள் ஆகிறது மேலே நீங்கள் படத்தில் பார்க்கும் 
ஜப்பானிய டாக்டருக்கு.
உலகிலேயே நீண்ட வருடங்கள் மருத்துவப் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்களில் அவரும் ஒருவர்.மருத்துவக் கல்வி பயில்விக்கும் கல்வியாளராகவும் இருப்பவர்.
அவரது பெயர் Dr.Shigeagi Hinohara. தமிழில் அதை நான் அச்சிட்டால் இப்படி வருகிறது .டாக்டர்.ஷிகியேகி ஹிநொஹர.(அந்த அரும் பெரும் முதியவர் என்னை மன்னிப்பாராக)
டோக்கியோவில் இருக்கும் St.Luke அகில உலக மருத்துவமனையில் 1941 ம வருடத்தில் இருந்து அவரது மாயக் கரங்கள் பட்டுக் குணமானோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
இரண்டாம் உலகப் போரில் சிதிலமடைந்த டோக்கியோ நகரில் உலகத் தரம் வாய்ந்த ஒரு மருத்துவ மனையையும் ,மருத்துவக் கல்லூரியையும் நிறுவ வேண்டும் என்ற தனது கனவை கடின உழைப்பினால் அவரே நிறைவேற்றினார்.
இன்று அந்த இரண்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் டாகடர் 150 புத்தகங்களுக்கும் மேலே எழுதி மற்றவர்களுக்கு ஒளிகாட்டி இருக்கிறார்.

பல லட்சம் பிரதிகள் விற்றிருக்கும் ''Living Long,Living Good'' என்ற டாக்டரின் புத்தகத்தில் இருந்து நாம் பயன் பெறச் சில வழிகாட்டல்கள்...

'நன்றாக இருக்கிறோம்என்ற உணர்வுதான் நமக்கு ஆற்றலைத் தருகிறதே அன்றி வெறுமனே நல்ல உணவுகளைச் சாப்பிடுவதாலோ இல்லை நீண்ட நேரம் தூங்கி ஓய்வெடுப்பதாலோ அல்ல.இந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேறெங்கும் போக வேண்டாம்,நமது குழந்தைப் பருவத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.
குதித்துக் களித்து விளையாடிய போது எத்தனை முறை உண்ணாமலேயே இருந்திருப்போம்.தூக்கத்தையே மறந்து ஆடித் திளைத்திருப்போம்.ஆனால் அப்போது குழந்தைகளாக இருந்த பொழுது பொங்கிய சக்தி இப்போது வேளா வேளைக்கு உண்டு,உறங்கும் நம்மிடம் இருக்கிறதா?நிச்சயம் இல்லை.
எனவே பெரியவர்களான பின்னும் ஆற்றலைப் பெருக்கும் அந்தக் குழந்தை மனோபாவத்தை இழந்து விடாதீர்கள்.
நேரத்துக்கு மதிய உணவு,நேரத்துக்குத் தூக்கம் என்ற வெற்றுக் கட்டுப் பாடுகளால்தான் உடல் களைப்படைகிறது.உடல் நலம் என்பது வெறும் விதிகளால் பேணப் படுவதல்ல.

மதம்,மொழி,நாடு,இனம் எல்லாவற்றையும் கடந்த ஒரு உண்மை என்னவென்றால் அதிக நாள் உயிர் வாழ்பவர்கள் எல்லாம் அதிக உடல் எடை இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே.
எனது காலை உணவு காஃபி,ஒரு டம்ளர் பால், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து ஆரஞ்சுச் சாறு
ஆலிவ் ஆயில் ரத்தக் குழாய்களின் நலத்துக்காகவும்,தோலின் பொலிவுக்காகவும்.
மதியம் பாலும்,கொஞ்சம் பிஸ்கட்டுகள் மட்டுமே.அதுவும் வேலை மிகுதியாக இருந்தால் மதியச் சாப்பாடே நான் உண்ணுவதில்லை.வேலையில் முழுக் கவனமும் செலுத்தும் போது எனக்குப் பசியே எடுப்பதில்லை.
இரவு காய்கறிகள்,ஒரு துண்டு மீன், சாதம்.
வாரத்துக்கு இரண்டு முறை கொழுப்பற்ற நூறு கிராம் இறைச்சி.

அடுத்து,எதையுமே முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
2014 வரை எனது பணிகள் என்னவென்று என்னால் திட்டமிடப் பட்டு விட்டன.அதில் எனது கேளிக்கையும் அடங்கும்,2016ல் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸ்தான் அது!

பணி ஓய்வு என்பதற்கு அவசியமே இல்லை.அப்படிக் கண்டிப்பாகத் தேவை என்றால் 65வயது தாண்டிய பிறகு யோசிக்கலாம்.

உங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.நான் வருடத்துக்கு 150 விரிவுரைகள் ஆற்றுகிறேன்.60 முதல் 90 நிமிடங்கள் வரை உரையாற்றுகிறேன்,உடல் பலத்தைப் பெருக்குவதற்காக நின்று கொண்டு!

உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஒரு பரிசோதனையையோ,அறுவைச் சிகிச்சையையோ பரிந்துரைத்தால் அவரிடம் நீங்கள் முதலில் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்.
'உங்கள் கணவருக்கோ,மனைவிக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ இதே சிகிச்சையைப் பரிந்துரைப்பீர்களா?' என்பதே அது.
பொதுவாக மக்கள் நம்பிக் கொண்டிருப்பதைப் போல எல்லோரையுமே டாக்டர்கள் குணப் படுத்தி விட முடியாது.
தேவை இல்லாமல் அறுவைச் சிகிச்சைகளுக்கும்,அவற்றின் வலிகளின் கொடுமைகளுக்கும் ஏன் ஆளாகிறீர்கள்? எனக்குத் தெரிந்து இசைக்கு நிறைய நோய்களைக் குணப் படுத்தும் ஆற்றல் இருக்கிறது,அதுவும் மற்ற மருத்துவர்கள் கற்பனையே செய்யாத அளவுக்கு.

உடல் நலத்துடன் இருக்க படிக்கட்டுக்களில் ஏறிச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.அத்துடன் உங்கள் பொருட்களையும் நீங்களே சுமந்து செல்லுங்கள்.நான் என் தசைகள் வலுப் பெற எப்பொழுதும் இரண்டிரண்டு படிகளாகத்தான் ஏறிச் செல்கிறேன்.

எனக்கு உத்வேகம் அளிப்பது ராபர்ட் ப்ரௌனிங்கின் 'அப்ட் வொக்லர்' என்ற கவிதைதான்.எனது சிறுமைப் பிராயத்தில் எனது தந்தை எனக்கு வாசித்துக் காட்டியது.
சிறிய கிறுக்கல்களை விடப் பெரிய ஓவியங்களையே வரைய முயல வேண்டும் என்று அந்தக் கவிதை தூண்டுகிறது.
நாம் உயிரோடு இருக்கும் வரையிலும் போட்டு கொண்டே இருந்தாலும் முடிக்க முடியாத ஒரு மாபெரும் வட்டத்தை வரைய வேண்டும் என்கிறது அந்தக் கவிதை.நாம் பார்க்கப் போவதெல்லாம் அந்த வட்டத்தினுடைய ஒரு சிறிய வளைவையே.மீதி எல்லாம் நம் பார்வைக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் தூரத்தில் அந்த வட்டம் பூர்த்தியாகத்தான் இருக்கிறது.

வலி என்பது ஒரு புரியாத புதிர்.வலியை மறப்பதற்கு ஒரே வழி நம் மனதை வேறு கேளிக்கைகளில் ஈடுபடச் செய்வதுதான்.பல்வலியால் வேதனைப் படும் குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.அது வலியை மறந்து விட்டு உங்களுடன் விளையாட ஆரம்பித்து விடும்.எல்லா மருத்துவ மனைகளிலும் கேளிக்கை சாதனங்கள் இடம் பெற வேண்டும்.எங்கள் செயின்ட்.லியூக் மருத்துவ மனையில் இசை நிகழ்ச்சிகள்,விலங்குகள் மூலம் சிகிச்சை,ஓவிய வகுப்புக்கள் அனைத்தும் உண்டு.

பொருட்களைக் குவித்துக் கொண்டே போக வேண்டும் என்ற வெறியில் பைத்தியம் பிடித்து அலையாதீர்கள்.உங்கள் கணக்கு முடிந்து நீங்கள் போகப் போகும் அந்த இடத்திற்கு நீங்கள் எதையுமே எடுத்துச் செல்ல முடியாது.

மருத்துவ மனைகளின் அனைத்துப் பகுதிகளிலும் சிகிச்சை கொடுக்கும் வசதிகள் இருக்கும் படி அவை கட்டப் பட வேண்டும்.எங்கள் மருத்துவ மனையில் காரிடார்கள்,பேஸ்மென்ட்கள், சர்ச் ஹால் இப்படி எங்கு வேண்டுமானாலும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியும்.அதனால்தான் தீவிர வாதிகளின் விஷ வாயுத் தாக்குதலில் பாதிக்கப் பட்டு ஒரே நேரத்தில் இங்கே அனுமதிக்கப் பட்ட 740 பேரில் 739 பேரை எங்களால் காப்பாற்ற முடிந்தது.

விஞ்ஞானத்தால் மக்கள் அனைவரையும் குணப்படுத்தவோ,மக்கள் அனைவருக்கும் உதவி புரியவோ முடியாது.அது மக்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகத்தான் பார்க்கும்,ஆனால் வியாதிகளோ தனித் தன்மைகள் கொண்டவை.ஒவ்வொரு மனிதனும் பிரத்தியேகமானவன்.அவனது நோய்கள் அவனது இதயத்தோடு தொடர்பு கொண்டவை.அதனால் ஒரு மனிதனின் நோய்களை அறிந்து கொள்ளவும்,அவற்றைக் குணப் படுத்தவும் வெறும் மருத்துவக் கலை மட்டும் போதாது.ஓவியம்,இசை போன்ற மற்ற கலைகளின் பங்களிப்பும் வேண்டும்.

வாழ்க்கை சம்பவங்களால் நிறைந்தது.நான் ஒரு முறை விமானத்தில் சென்ற போது அது தீவிர வாதிகளால் கடத்தப் பட்டு நான்கு நாட்கள் 40 டிகிரி வெப்பத்தில் கைகளில் விலங்குகள் மாட்டப் பட்டுப் பிணைக் கைதியாக இருக்க நேர்ந்தது.அந்தச் சூழ்நிலையிலும் ஒரு டாக்டராக எனது உடலில் நடைபெற்ற மாற்றங்களையே ஒரு பரிசோதனை போலக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எப்படி உடல் தனது இயக்கங்களையே மெதுவாக மாற்றிக் கொள்கிறது என்பதை உணர்ந்து வியந்து போனேன்.

நமக்கென்று ஒரு ரோல் மாடலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அவர்களை விடச் சிறப்பாக நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதே நமது குறிக் கோளாக இருக்க வேண்டும்.பிரச்சினைகளைச் சந்திக்கும் போது அவற்றையே நமது ரோல் மாடல்கள் எப்படி அணுகுவார்கள் என்பதைச் சிந்தித்துச் செயலாற்றினால் எந்தப் பிரச்சினையுமே கையாள்வதற்கு எளிதாக இருக்கும்.

60 வயது வரை உங்கள் குடும்பத்துக்காக உழையுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் வாழும் சமூகத்திற்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள்.இதுவே நீங்கள் சேவைகள் புரியத் தொடங்கும் தருணம்.

நீண்ட நாட்கள் வாழ்வது ஒரு இனிமையான அனுபவம்.
இன்றும் ஒருநாளைக்கு 18 மணி நேரம் நான் உழைக்கிறேன்,அதன் ஒவ்வொருநிமிடத்தையும் நேசித்தபடியே.

- Dr.Shigeagi Hinohara




Source : http://shanmughapriyan.blogspot.com/2009/06/97.html
»»  read more

Friday, August 14, 2009

வாய் விட்டுப் கேளுங்கள் . மனம் விட்டுப் பேசுங்கள்

உறவுகளானாலும் சரி , நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன . பலம் பெறுகின்றன . மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும் , சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன . பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன ; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன .
என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது .
ஒரு இராணுவ வீரனும் , ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள் . மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது . அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி . இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள் . போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா ?
ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான் . விமானதளத்தில் அவன் மனைவியும் , மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள் . மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன் . அவன் கண்ணிலும் , மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர் .
வீடு திரும்புகிறார்கள் . கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும் , தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள் .
கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான் . " அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய் ?"
அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான் . " நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை "
வீரன் மகனைக் கேட்கிறான் . " பின் யார் அப்பா ?"
" தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார் . அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார் . படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார் . அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள் "
வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது .
மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள் . அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை . அவளை அவன் தொடவில்லை . அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான் . இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள் .
மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான் . " இதோ என் அப்பா "
திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது . தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது , மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான் .
வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும் , துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான் .
இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம் . மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம் . இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும் . ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான் . மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம் . அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள் . ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல் , மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா ?
எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும் , தவறாக ஆக்கி விடுவதும் சுலபம் . சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும் . இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும் , நட்புகளும் , சந்தோஷங்களும் தான் .
புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள் . முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள் . நீங்களாக அனுமானிக்காதீர்கள் . அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள் . அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள் .
தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி , நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள் . அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம் . அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ , மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா ? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது . அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது .
எனவே நீண்டநாள் ஆழமான நட்பும் , உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள் - வாய் விட்டுப் கேளுங்கள் . மனம் விட்டுப் பேசுங்கள் .
அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு  ! !
»»  read more

Wednesday, August 05, 2009

ஓசைப்படாமல் வரும் சர்க்கரை நோயும் , இதய நோயும் !!!

சர்க்கரை நோயும் சரி, இதய நோயும் சரி, ஓசைப்படாமல் தான் வரும். எப்போது வரும், யாருக்கு வரும் என்பதே சொல்ல முடியாது. பல சிம்பிளான அறிகுறிகளை டாக்டர்கள் சொல்லத்தான் செய்கின்றனர். ஆனால், பலரும், "வரும் போது வரட்டும்;பார்த்துக் கொள்ளலாம்' என்று கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.


ஷுகர்! ஒரு விளக்கம்:


உடலுக்கு க்ளூக்கோஸ் என்பது, எரிசக்தி போல; பைக்குக்கு பெட்ரோல் போடுவதுபோல!


ஆம், க்ளூக்கோஸ் , உடலுக்கு தேவையான ஒன்று தான். ஆனால், அதுவே அதிகமானாலோ ஆபத்து தான். கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது தான் சர்க்கரை வியாதி உருவாகிறது.


இனி படத்தை பாருங்கள்:


1. சாப்பிடும் போது உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் செல்லும் உணவு, உள்ளே நொறுக்கப்பட்டு க்ளூக்கோஸ் ஆக பிரிகிறது.


2. உணவில் இருந்து பிரிந்த க்ளூக்கோஸ், ரத்தத்தில் சேர்கிறது. ரத்தம் மூலமாக , செல்களுக்கும், மற்ற உறுப்புகளுக்கும் க்ளூக்கோஸ் செல்கிறது.


3. இன்சுலின் - உடலில் உள்ள கணையத்தில் உள்ள சுரப்பி தான்இன்சுலினை தடையில்லாமல் சுரக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மிகாமல் கட்டுப் படுத்தும் பணி இதனுடையது.


4. ரத்தத்தில் எப்போதெல்லாம் க்ளூக்கோஸ் அளவு அதிகமாகிறதோ, அப்போது தானாகவே, கணையத்தில் உள்ள சுரப்பி தானியங்கி வேலை செய்து இன்சுலினை சுரக்கும். அப்படி சுரந்து, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.


5. கணையத்தில் உள்ள சுரப்பியால், இன்சுலின் சுரக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ, போதுமான அளவில் சுருக்க முடியாமல் போனாலோ, அப்படியே இன்சுலின் சுரந்து, அதை பயன்படுத்திக்கொள்ள முடியா நிலை ஏற்பட்டாலோ ஏற்படுவது தான் சர்க்கரை வியாதி.


6. டைப் - 1 ஷுகர் : ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து விட்டால், உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி பலவீனம் அடைகிறது. அப்போது கணையத்தில் உள்ள சுரப்பி செயலிழக்கிறது. இன்சுலின் சுரப்பது நிற்கிறது. இது தான் டைப் 1 ஷுகர்.


7. டைப் - 2 ஷுகர் : இன்சுலின் சுரந்தும், அதை உடல் ஏற்றுக்கொள்ளாமல் பாதிக்கப்படுவது தான் இது. இதனால், உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.


8. கல்லீரல், வயிற்றுக்கு பின் பகுதியில் உள்ள கணையம். அங்கிருந்து தான் இன்சுலின் சுரப்பி செயல்படுகிறது.




மேலும் தகவல்களுக்கும், உடல் எடையை எளிதில் குறைப்பதற்கும்.. அழைக்கவும்.. 
+91 96009 9 25 25

»»  read more

உடல் பருமன்!!! குறைக்க ???

இதய பாதிப்பு, சர்க்கரை நோய்க்கு முக்கிய அறிகுறியே, உடல் பருமன் தான். சிறிய வயதிலேயே குண்டாகி விடும் பலருக்கு, இளம் வயதை அடையும் போதே பாதிப்பு ஆரம்பித்து விடுகிறது. நீங் கள் நாற்பது வயதை எட்டுபவரா? உங்கள் இடுப்பு சுற்றளவு 35 அங்குலம் அல்லது 90 சென்டிமீட்டரை எட்டி விட்டதா? அப்படியானால், கண்டிப்பாக உஷாராகி விடுங்கள். சர்க்கரை வியாதிக்கு அடிப்படையான உடல் பருமனை அளவிடுவதில், இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் வேறுபாடு உண்டு. இந்தியாவில் 90 செ.மீ., என்பது தான் உடல் பருமன்; சர்வதேச அளவில் இந்த அளவு 112 செ.மீ.,ஆக உள்ளது.


அடிவயிற்று கொழுப்பு!:
உடல் பருமனை அளவிடுவதில் ஒரு முக்கிய விஷயத்தை டாக்டர்கள் கவனத்தில் கொள்கின்றனர். தொந்தி பெருத்தாலும், கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதாகவோ, சர்க்கரை வியாதி வரும் என்றோ கூற முடியாது.ஆனால், அடிவயிறு பெருத்தால் தான் ஆபத்து. முதலில், வளையம் போல கோடு விழும். அதன்பின், வெளிப்படையாக அடிவயிறு பெருத்திருப்பது தெரியும். இதை தெரிந்து கொண்டால், உடனே டாக்டரிடம் போய் சோதனை செய்து கொள்வது மிக நல்லது.இந்தியர்களை பொறுத்தவரை, அடிவயிற்று கொழுப்பு அளவை வைத்தே, அவர்களுக்கு பாதிப்பை மதிப்பிட்டு விடலாம் என்று டாக்டர்கள் கருதுகின்றனர்.


ஒல்லியாக இருந்தாலும்: 
சர்வதேச அளவில் ஒல்லியாக இருப்போருக்கு உடல் பருமன் உள்ளதாக கணக்கிடப்படுவதில்லை. அதுபோல, அவர்களுக்கு கொழுப்பு உள் ளதாகவும் சொல்ல முடியாது. ஆனால், இந்தியர்களை பொறுத்தவரை, அடிவயிற்று கொழுப்பு என்பது, குண்டாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஒல்லியாக தோற்றம் உள்ளவர்களுக்கு கூட இருக்கிறது. இதனால் தான், "அடிவயிற்று கொழுப்பை வைத்து சர்க்கரை நோய் அறிகுறி கண்டுபிடிக்கப்படுகிறது' என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.


பி.எம்.ஐ., கணக்கு:
 இதுபோல, மற்ற நாடுகளுக்கும் இந்தியாவுக் கும் பி.எம்.ஐ., கணக்கிடுவதிலும் கூட வேறுபாடு உள்ளது. பி.எம்.ஐ., என்பது "பாடி மாஸ் இண்டெக்ஸ்' எனப்படுவது. சர்க்கரை வியாதி, இதய பாதிப்பை கண்டுபிடிக்க இது எளிதான அறிகுறி. ஒருவரின் எடையை அவர் உயர அளவால் வகுத்தால் வருவது தான் பி.எம்.ஐ., இந்தியர்களை பொறுத்தவரை, பி.எம்.ஐ., 23 என்பது உடல் பருமனாக கருதப்படுகிறது. அதற்கு மேல் இருந்தால் பாதிப்பு அறிகுறி என்று மதிப்பிடப்படுகிறது.


தெற்காசிய மக்களுக்கு: 
ஆசிய நாடுகளில் தெற்காசிய மக்களுக்கு தான் பி.எம்.ஐ., அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கு காரணம், அவர்களின் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை தான் என்றும் மதிப்பிடப்பட்டுள் ளது. இந்த உடல் பருமன், இதய, சர்க் கரை நோய்க்கு மட்டுமல்ல, மார் பக, குடல் புற்றுநோய்க்கும் காரணமாக அமைகிறது என்றும் இப்போது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.


மருந்து எப்போது?: 
இந்தியர் களுக்கு அடிவயிற்று சுற்றளவு 90 சென்டி மீட்டர் அல்லது, பி.எம்.ஐ., 23 ஐ தாண்டியவுடன் விழித்துக் கொள்வது மிகவும் நல்லது. அப் போது டாக்டரிடம் காட்டி, மருந்துகளை சாப்பிட ஆரம்பிப்பது, பின்னாளில் சர்க்கரை நோய் அதிகரிக்காமல் இருக்க வழி வகுக்கும். ஆசிய நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் பி.எம்.ஐ.,யில் உள்ள வேறுபாடுகளை கருத்தில் கொண்டு, உலக சுகாதார அமைப்பு, இதய, சர்க்கரை நோய்களுக்கான அறிகுறிகள், அதற்கான மருத்துவ சிகிச்சைகள், உணவு முறைகள் குறித்து புதிய வழிகாட்டு முறைகளை அறிவிக்க உள்ளது.


21 - 23 க்கு இடையே ஓகே!
சராசரியாக ஒருவருக்கு பி.எம்.ஐ.,என்பது 21க்கும் 23க்கும் இடையே இருப்பதே நல்லது. அதற்கேற்ப உடல் பராமரிப்பு அவசியம். சத்தான உணவு சாப்பிடுவது மட்டுமல்ல, உடற்பயிற்சியும் மிக முக்கியம். அப்போது தான் உடல் பருமன் வராமல் இருக்கும். இந்த அளவை பராமரிக்க இளம் வயதில் இருந்தே உணவுக்கட்டுப் பாட்டை வளர்த்துக்கொள்ள வேண் டும். அப்போது தான் முப்பது வயதை தாண்டும் போது, உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கும்.


60 சதவீதம் பேர் இந்தியாவில்:
வரும் 2010ல், உலகத்தில் உள்ள இதய நோயாளிகளில், சர்க்கரை நோயாளிகளில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் தான் இருப்பர் என்று உலக அளவில் நடத்தப்பட்ட சர்வேயில் தெரியவந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில், வானிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை ஆகிய குறைபாடுகளுடன் இன் னொரு பயமுறுத்தும் அபாயம் "ஒபிசிட்டி' எனப்படும் உடல் பருமன் தான். இந்தியாவில் இளம் வயதினரில் 30 சதவீதம் பேர் உடல் பருமனாக உள்ளனர். இதனால், எதிர்காலத்தில் இதய, சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகும் என்பது மட்டுமல்ல; இளம் வயதில் இந்த பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.


பகோடா, சமோசா வடையே காரணம்: 
நகரங்களில் இளம் வயதினர் அதிக அளவில் உடல் பருமன் பெற காரணம், அவர்கள் சாப்பிடும் மொறு மொறு சமோசா, வடை, பகோடா உணவுப்பொருட்கள் தான். சாட் உணவுகளில், எண் ணெய் சம்பந்தப்பட்ட உணவுப்பொருட்கள் தான் அதிகம் சேர்க்கப்படுகின்றன. இதுவே, இளம் வயதினருக்கு உடல் பருமன் அதிகரிக்க காரணமாகிறது.




உடல் பருமனை எளிதில் குறைக்க.. அழையுங்கள் +91 9600 600 688.. (எல்லாம் ஒரு விளம்பரம்தான்..)
»»  read more

ஆசிரியர் பயிற்சிக்கு தடை.. மாணவர்களே உஷார்..

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கவுன்சிலிங் முடிந்தும் "சீட்'கள் நிரம்பாத நிலையில், ஜூலை 31க்கு பின், மாணவர்களை சேர்க்க அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன.ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர விரும்பாததால், பல நிறுவனங்களில் இந்த ஆண்டு பாதியளவு கூட "சீட்'கள் நிரம்பவில்லை. ஏராளமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் துவங்கியதும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளிகளிலும் பி.எட்., ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர விரும்பாததற்கு முக்கிய காரணங்கள்.
தற்போதுள்ள நிலையில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தான் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதுவும் பெண்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. எனவே, அதிக ஆர்வம் ஏற்படவில்லை. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு கவுன்சிலிங் மூலம் நிரப்பும் பணி, கடந்த 24, 25ம் தேதிகளில் முடிவடைந்தது. இதில் பல நிறுவனங்களில் பாதியளவு கூட அரசு "சீட்'கள் நிரம்பவில்லை. அதே நிலை தான் நிர்வாக இடங்களுக்கும் உள்ளது.
இந்நிலையில், ஜூலை 31க்கு பின், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களை சேர்க்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தும், மாணவர்களை தேடிப் பிடிக்கும் நிலை உள்ளதால் காலிப் பணியிடங்களை என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர். கடந்த ஆண்டை போல, மாணவர் சேர்க்கைக்கான காலத்தை இந்த ஆண்டும் நீட்டிக்க வேண்டும், என ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

NATIONAL COUNCIL FOR TEACHER EDUCATION  - இன் அறிவிப்பு


பிராக்டிகல் கவலை: ஆசிரியர் பயிற்சியின் போது பிராக்டிகல் வகுப்புக்காக மாணவர்கள் அங்கீகாரம் பெற்ற துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குச் செல்வர். அங்கு ஒரு பள்ளிக்கு இரண்டு மாணவர்களே செல்ல வேண்டும். இப்படி பார்த்தால் 50 மாணவர்கள் படிக்கும் பயிற்சி நிறுவனங்களுக்கு 25 பள்ளிகள் தேவை. பல பள்ளிகளில் பயிற்சி மாணவர்களை அனுமதிக்கவே தயங்கும் நிலையில், ஒரு பள்ளிக்கு இரண்டு மாணவர்களை அனுமதிப்பது பிரச்னையாகவே உள்ளது.


courtsy : Dinamalar and NCTE- Website.
»»  read more

Friday, July 24, 2009

Free ! Word obesity Awareness Camp!!

»»  read more

Monday, July 06, 2009

ஆன்‍ லைன் புத்தக கண்காட்சி மற்றும் இலவச டெளன்லோட்..


உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை சர்வசாதாரணமாக இணையதளங்களில் காணமுடிகிறது. அதனால் இணையதள நூலகங்கள் பெயர் பெற்று வருகின்றன.
இந்நிலையில், இணையதளத்தில் உலக புத்தக்காட்சி தொடங்கி உள்ளது. பல இணையதள நூலகங்கள் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.
கடந்த சனிக்கிழமை இப்புத்தகக்காட்சி தொடங்கியது. இங்கு காணப்படும் லட்சக்கணக்கான புத்தகங்களுக்கு முன்னுரை, தொகுப்புரை என தனித்தனியாக தரப்பட்டுள்ளது. அவற்றை  படித்துவிட்டு உள்ளே சென்று புத்தகங்களையும் படிக்கலாம். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 25 லட்சம் புத்தகங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். புத்தகப் பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு இது.
இந்த புத்தகக்காட்சியின் இணைய தள முகவரி www.worldebookfair.com
»»  read more