Posts

Showing posts from July, 2009

Free ! Word obesity Awareness Camp!!

Image

ஆன்‍ லைன் புத்தக கண்காட்சி மற்றும் இலவச டெளன்லோட்..

Image
உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை சர்வசாதாரணமாக இணையதளங்களில் காணமுடிகிறது. அதனால் இணையதள நூலகங்கள் பெயர் பெற்று வருகின்றன. இந்நிலையில், இணையதளத்தில் உலக புத்தக்காட்சி தொடங்கி உள்ளது. பல இணையதள நூலகங்கள் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன. கடந்த சனிக்கிழமை இப்புத்தகக்காட்சி தொடங்கியது. இங்கு காணப்படும் லட்சக்கணக்கான புத்தகங்களுக்கு முன்னுரை, தொகுப்புரை என தனித்தனியாக தரப்பட்டுள்ளது. அவற்றை  படித்துவிட்டு உள்ளே சென்று புத்தகங்களையும் படிக்கலாம். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 25 லட்சம் புத்தகங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். புத்தகப் பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு இது. இந்த புத்தகக்காட்சியின் இணைய தள முகவரி www.worldebookfair.com

பத்திரகிரியாரின் மெய்ஞானப்புலம்பல்!! --சுஜாதா

பத்திரகிரியாரின் மெய்ஞானப்புலம்பல். கீழ்க்காணும் அர்த்தம் கொடுக்க விரும்பவில்லை எளிய ஆனால் மயக்கும் வரிகள்தாம் , இவற்றை சிந்தித்து பாருங்கள், இந்த சித்தர் தேடுவது எந்த விதமான் அனுபவத்தை என்று யோசித்து பாருங்கள். இதைப்பற்றி நிங்களே உங்களுடைய சொந்த முடிவுக்கு வருவது முக்கியம். --சுஜாதா


ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை கட்டறுத்து
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவ தெக்காலம்?
----------- 
சேயாய் சமைந்து செவிடூமை போல் திரிந்து
பேய் போல் அலைந்து உன் பிரமை கொள்வதெக்காலம்??
------------
பற்றற்று நீரில் படர் தாமரை இலை போல‌
சுற்றத்தை நீக்கி மனம் தூர நிற்பதெக்காலம்??
---------
மனதை ஒரு வில்லாக்கி வாலறிவை நாணாக்கி
எனதறிவை அம்பாக்கி எய்வதினி எக்காலம்??
---------
நின்ற நிலை பேராமல் நினைவில் ஒன்றும் சாராமல்
சென்ற நிலை முக்தியென்று சேர்ந்தறிவது எக்காலம்???
----------
வீடு விட்டுப் பாய்ந்து வெளியில் வருவார் போல்
கூடு விட்டுப் பாயும் குறிப்பறிவதெக் காலம்??
----------
ஆட்டம் ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல்
தேற்றம் அற்ற வான் பொருளை தேடுவதும் எக்கா…

தண்ணீரில் நிலவு!

"இப்படியும் அப்படியும்
நான் பழைய பாத்திரத்தை
காக்க முயற்சித்தேன். 
திடீர் என்று அடிப்பாகம் விழுந்த‌து  


இனி‍-
பாத்திரத்தில் தண்ணீரும் இல்லை 
தண்ணீரில் நிலவும் இல்லை!"


இதற்கு ஒரு சுவரசியமான் பின்னணி உண்டு அது நாளை...