பத்திரகிரியாரின் மெய்ஞானப்புலம்பல்!! --சுஜாதா

பத்திரகிரியாரின் மெய்ஞானப்புலம்பல். கீழ்க்காணும் அர்த்தம் கொடுக்க விரும்பவில்லை எளிய ஆனால் மயக்கும் வரிகள்தாம் , இவற்றை சிந்தித்து பாருங்கள், இந்த சித்தர் தேடுவது எந்த விதமான் அனுபவத்தை என்று யோசித்து பாருங்கள். இதைப்பற்றி நிங்களே உங்களுடைய சொந்த முடிவுக்கு வருவது முக்கியம். --சுஜாதா


ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை கட்டறுத்து
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவ தெக்காலம்?
----------- 
சேயாய் சமைந்து செவிடூமை போல் திரிந்து
பேய் போல் அலைந்து உன் பிரமை கொள்வதெக்காலம்??
------------
பற்றற்று நீரில் படர் தாமரை இலை போல‌
சுற்றத்தை நீக்கி மனம் தூர நிற்பதெக்காலம்??
---------
மனதை ஒரு வில்லாக்கி வாலறிவை நாணாக்கி
எனதறிவை அம்பாக்கி எய்வதினி எக்காலம்??
---------
நின்ற நிலை பேராமல் நினைவில் ஒன்றும் சாராமல்
சென்ற நிலை முக்தியென்று சேர்ந்தறிவது எக்காலம்???
----------
வீடு விட்டுப் பாய்ந்து வெளியில் வருவார் போல்
கூடு விட்டுப் பாயும் குறிப்பறிவதெக் காலம்??
----------
ஆட்டம் ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல்
தேற்றம் அற்ற வான் பொருளை தேடுவதும் எக்காலம்??
-----------
தான் என்ற ஆணவமும் தத்துவமும் கெட்டொழிந்தே
ஏன் என்ற பேச்சும் இலாது இலங்குவதும் எக்காலம்???
-----------





Comments

  1. வரிகளைப் பார்த்தால் ‍ இன்னோரு திருக்குறள் மாதிரியே இருக்கிரறது...படிக்கும் போது சிலிர்க்கிறது,,,இதே போல் பட்டினத்தார் பாடல்கள் கிடைத்தால் போடுங்களேன்...

    ReplyDelete

Post a Comment

கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!

use tamileditor.org for post you comments in TAMIL.