Posts

Showing posts from June, 2009

சொத்து வாங்கும்போது கவனிக்கவேண்டியவை...

“வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்!” எ‎ன்று கூறுவார்கள். இரண்டும் சாதாரண விஷயமல்ல எ‎ன்பதே அதன் தொனி. வீடு, நிலம் போ‎‎ன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை எ‎ன்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே எ‎ன்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகி‎‎ன்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல ‏ இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது; சில சமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.


“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக அமைந்துவிடுகிறது”

சொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத்தி‎ன் எந்தெந்தத் துறைகளை நா‎ம் அணுக வேண்டும்?

மாநில அரசி‎ன் பதிவுத் துறை (Registration Department)யும், வருவாய்த் துறை (Revenue Department)யும், சொத்துப் பரிமாற்றத்தில் சம்பந்தப்படும். சொத்து வாங்கியபி‎ன்‏ இவ்விரு துறைகளில…

கண்ணீரால் காப்பாற்றப்பட்ட பெண்!!

சீனாவைச் சேர்ந்த பெண் குவோயிங். 47 வயதான இவரது மூளையில் ரத்தக்குழாய் வெடித்ததில் இறந்து போனதாக கருதிய குடும்பத்தினர் இவரது உடலைத் தகனம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். அப்போது மூடியிருந்த அவரது கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு வெளியானதைப் பார்த்த உறவினர் ï இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தார். அதனால் அவர் திரும்பவும் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த நிதி உதவியைக் கொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணம் அடைந்தார்.

ஒரு ஜோக்..!

டிவி லைவ் ஷோவில் ஒரு நேயரிடம் தொகுப்பாளினி தொ: வணக்கம், நீங்க எங்கிருந்து பேசறீங்க..? நே : சைதாப்பேட்டையிலிருந்து.. தொ: அட நானும் சைதாப்பேட்டைதான். எந்த ஏரியா..? நே : ஜெயராஜ் தியேட்டர் பக்கம் அனு ப்ளாட்ஸ்.. தொ: அட நான் கூட அந்த ப்ளாட்ல தான் இருக்கேன். ப்ளாட் நம்பர் என்ன..? நே : ஏ1 தொ: ஏங்க கிண்டல் பண்ணாதீங்க.. அது என் ப்ளாட் நம்பர்.. நே : ஏய்.. நான் புருஷந்தான்.. சாவியை எங்க வச்சு தொலைச்ச..? .................................

மைக்கேல் ஜாக்சன் (ஆகஸ்ட் 29, 1958 - ஜூன் 25, 2009

Image
பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சன் (ஆகஸ்ட் 29, 1958 - ஜூன் 25, 2009)
மைக்கேல் ஜாக்சன்... இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே உலகின் கோடிக்கணக்கான இசை, நடனப் பிரியர்களுக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்படும். வசீகர இசையில் கிரங்கிப் போன எண்ணிலடங்கா ரசிகர்களுக்கு ஈடு செய்ய முடியாத இசை சகாப்தம்!
'கலையை ரசித்து இன்புற மொழி ஒரு பொருட்டல்ல' என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் உலக மகா இசைக் கலைஞர்களில் இவருக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு.
மைக்கேல் ஜாக்சனின் இசையையும் நடனத்தையும் கண்டு ரசித்து ஆனந்தத் தாண்டவமாடும் லாஸ் ஏஞ்செல்ஸ் இளைஞன்பெறும் அதே உணர்வே, லஸ் கார்னரில் டி.வி.டி.யில் ஜாக்சனைக் கண்டு ரசிக்கும் சென்னை இளைஞனுக்கும் ஏற்படும் என்பதே இவரது இசையின் ஈர்ப்புச் சகதி!
அண்மைக்காலமாக சில நெருக்குதல்களைச் சந்தித்து, அதிலிருந்து மீள்வதற்காக மீண்டும் இசைப் பயணத்தை புத்துணர்வுடன் துவங்க முனைந்த போது, அந்தச் சோகம் நிகழ்ந்தது.
காலனிடம் தனது இசைக் கலைஞனை பறிகொடுத்த துக்கம் தாளாதிருக்கின்றனர், கோடிக்கணக்கான ஜாக்சனின் ரசிகர்கள்!
இவ்வேளையில் மைக்கேல் ஜாக்சனின் 50 ஆண்டு கால வாழ்க்கையை சற்றே நினைவுகூருவோம்..…

ஒரு மணி நேரத்தின் விலை..

எங்கே இருந்து வந்தோம்னு தெரியாது எங்க போகப் போறோம்னும் தெரியாது. இந்த ரெண்டு கேள்விக்கும் நடுவுல ஒரு அழகான வாழ்க்கை நமக்குக் கிடைச்சிருக்கு. இந்த உலகத்துல எவ்வளவோ அழகான விசயங்கள் இருக்கத் தாங்க செய்யுது. என்னிக்காவது ஒரு நாள் ஏதாவது ஒன்ன ரசிச்சிருக்கோமா ? எத்தனையோ முறை பூக்களப் பார்க்குறோம் நிலாவப் பார்க்குறோம் மழை பெய்யும் போதோ இல்ல வெயிலுக்காகவோ மரநிழல்ல ஒதுங்குறோம் என்னிக்காவது அந்த பூக்களையோ நிலாவையோ மழையையோ இல்ல அந்த மரத்தையோ ரசிச்சிருகிறோமான்னா நம்ம நிறையப் பேரோட பதில் இல்லைன்னு தாங்க இருக்கும்.

அதுக்கெல்லாம் நேரமில்லைன்னு தான் சொல்லுவோம். ஏன்னா இந்த போட்டியான இயந்திர வாழ்க்கையின் அதிவேகப் பயணத்துல நாமெல்லாம் நம்மள அறியாமலேயே கட்டாயப் பயணிகளா ஆக்கப்பட்டு இருக்குறோம். இன்றைய உலகத்துல இது தவிர்க்க முடியாத பயணம்ங்க.

ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரங் கூட பத்தலைன்னு சொல்லுரவங்க கூட இருக்குறாங்க. நாம வாழ்நாள்ல மூனுல ஒரு பங்க தூக்கத்துக்குன்னு ஒதுக்குவோம். இந்த தூக்கத்தக் கூட குறைச்சுக்கிட்டு எப்பப் பார்த்தாலும் எதாவது ஒரு பிரச்சனைய தலையில தூக்கிக்கிட்டு அலையிரவங்க நம்மள்ல நிறைய பேர…

குழந்தையின் சிரிப்பில்...

Image

இன்சுலின் = இருதய நோய் ???

பிரபலமான எழுத்தாளர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ அமைப்பாளர்களும் உணவுகளில் இருக்கும் கொழுப்புதான், உடல் பருமன், இருதய நோய் மற்றும் இதர சுகாதாரக் கோளாறுகளுக்கு முக்கியக் காரணம் என்று பரவலாக கூறிவருகிறார்கள். ஆனால், இதற்கு முக்கிய காரணம் இன்சுலின்தான் என்பதற்கு புதிய ஆதாரங்கள் இப்போது கிடைத்துள்ளன. உடலினால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின்தான் உடலில் சீனியின் அளவை அதிகரித்து இருதய நோய்க்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இன்சுலின் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளையும், அது எப்படி நோயை ஏற்படுத்துகிறது என்பதையும் பிளாங்குப் பயனீட்டாளர் குரல் இதழ் திரட்டியுள்ளது. அந்த விபரங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இன்சுலின் என்பது சக்திமிக்க ஹார்மோன் வகையாகும். இது நாம் உண்ணும் சமயங்களிளெல்லாம் உடலினால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் அதிகமான உணவை உட்கொள்ளும் போது அல்லது அதிக சீனி அல்லது அதிக கார்போஹைடிரேட் உணவுகளை, குளிர்பானம், வெள்ளை ரொட்டி போன்றவற்றைச் சாப்பிடும் சமயங்களில் இன்சுலின் உற்பத்தி அதிகமாகிறது. இந்த உணவுகளை சாப்பிட்டதுமே அவை குளுகோசாக மாறி இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இரத்தத்தில் சேரும் இந்தச…
Image
என்ஜினீய‌ர்க‌ள் மிஸ் ப‌ண்ணிடாதீங்க‌எல்லா என்ஜினீய‌ரிங் பாட‌த்துக்கும் Video Lessons இந்த‌ லின்க்ல இருக்கு. IIT,IIscபோன்ற‌ சிற‌ந்த‌ நிறுவ‌ன‌ பேராசிரிய‌ர்க‌ள் பாட‌ம் ந‌ட‌த்த‌றாங்க‌‌.

Video Lessons for Engineering!!

பாருங்க‌ க‌ண்டிப்பா ப‌ய‌னுள்ள‌தா இருக்கும்Source : http://iyarkai09.blogspot.com/2009/04/blog-post_11.html

அலுவலகம் செல்பவர்களுக்கு!!!

நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் ரசித்து, நிதானமாய்ச் சாப்பிட முடிகிறதா? அலுவலகம் செல்பவர்கள் தினமும் பேருந்திலும், மற்ற வாகனங்களிலும் சென்று நெரிசலில் சிக்கித் திணறி அலுவலகம் செல்கின்றனர். அங்கு பணிகளை முடித்துவிட்டு, அப்பாடா என்று வீடு திரும்பினாலும் அவர்களால் நிம்மதியாக உணவருந்துவது என்பது கடினம்தான். அவர்கள் வாழ்க்கை இயந்திரத்தனமானதுதான்! ஆயினும் உழைத்தால்தானே உயர முடியும்! உழைப்புக்கு உடல் நலம் ஏற்றதாக இருக்க வேண்டாவா? உடல் ஒத்துழைக்க நன்கு சாப்பிட வேண்டுமே? அலுவலகம் செல்பவர்களுக்குச் சில யோசனைகள் தருவது நல்லதென்று கருதுகிறேன். காலை உணவைத் தவிர்க்காதீர்! பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்திமுழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும்சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்…

நோயற்ற உடலில் நோயற்ற உள்ளம்- என்பதே கல்வியின் லட்சியம்???.

நோயற்ற உடலில் நோயற்ற உள்ளம்-
என்பதே கல்வியின் லட்சியம்.
--- லத்தீன் வாசகம்.


சமீபத்தில் அமெரிக்காவில் பொறியாளர் வேளையை இழந்த இந்தியர் தன் மனைவியையும், மூன்று பிள்ளைகளையும் கொடுரமான முறையில் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

மற்றொரு இந்தியர் ஷேர் மார்க்கெட்டில் போட்ட பணமெல்லாம் திவாலாகிப் போக தன் மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் ஆக நான்கு பேர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கிறார்.

இப்படி திடீரென செய்யப்படும் கொடுரமான கொலைகள் திட்டமிடப்பட்டும் செய்யப்படவில்லை. சாராசரியாக நம்மைப் போன்று தன் குடும்பத்தினரை நேசித்து, குழந்தைகளை பராமரித்த கல்வி அறிவுள்ள மனிதனுக்குள் எப்படி இப்படியொரு வக்கீரமம் சீண்டுகின்றது? ஒருமுறை கத்தியால் குத்தும் போதே பீறிட்டொழும் ரத்தத்தில் நெஞ்சம் பதறாதா? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. எப்படி தன் குழந்தைகளை கொல்லும் அளவுக்கு மனஅழுத்தங்கள் ஏற்படுகின்றன.

இப்படி பல சம்பவங்கள். படிக்கும் போதே சில நிமிடங்கள் திக்கென்று இருக்கின்றது. சம்பவங்களைச் சுற்றியே மனம் சுழல்கிறது. கொலை செய்தவன் இடத்தில் இருந்தும், கொலை செய்யப்பட்டவர்கள் இடத்தி…

சிறார்களுக்கு பாலியல் தொல்லை குறித்து!!

சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களைப் பற்றிய செய்திகள் நாம் தினமும் பார்க்கின்ற ஒன்றாகிவிட்டது. அதைப் படிக்கும்போது 'யாருக்கோ நடந்த சம்பவம் தானே'  என்று பெற்றோர்களாகிய நாம் கவலைப்படுவதில்லை.

ஆனால், யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் நடக்க கூடிய விதத்தில் இப்போது இச்சம்பவங்கள் அதிகமாக நம் சமூகத்தில் நடந்து கொண்டிருகின்றது. அவற்றைத் தடுப்பதற்காக நாமே சில முன்னெச்சரிகை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது அவசியமே.

நம் சமூகத்தில் சிறுமிகள்தான் பாலியல் கொடுமைக்கு மிகுதியாக ஆளாகின்றனர். அதேபோல், சிறுவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாமால் இல்லை.

பாலியல் பற்றிய அடிப்படைக் கல்வியை தங்களது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டியது ஒவ்வொரு தாய்மார்களின் கடமை. ஏனென்றால், வெளியாட்கள் குழந்தைகளுடைய அறியாமையை பயன்படுத்தி கொள்கிறார்கள். உதாரணமாக, வீட்டிலுள்ள டிரைவர், வீட்டு வேலைக்காரர்கள், வெளியிலுள்ள தெரிந்தவர்கள், வீட்டுக்கு வருகின்ற சொந்தக்காரர்கள் போன்றவர்களிடமிருந்து தான் குழந்தைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் ஏற்படுகின்றது.

அதனால் குழந்தைகளைக் கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தவறான காரியம் செய்பவர்களிடம் …

விண்டோஸ் 7

Image
முற்றிலும் புதியதொரு அனுபவத்தையும் கூடுதல் வசதிகளையும் கொண்டதாக விரைவில் விண்டோஸ் 7 நமக்குக் கிடைக்க இருக்கிறது. தொடக்கத்தில்Blackcomb, Vienna என குறியீட்டுப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்பு விண்டோஸ் 7 என்ற பெயரில் விரைவில் வெளிவர இருக்கிறது.

விண்டோஸ் 7 இறுதி சோதனைத் தொகுப்பினைப் பல்லாயிரக் கணக்கானவர்கள் டவுண்லோட் செய்து பயன்படுத்தித் தங்களுக்கேற்பட்ட அனுபவத்தினை மைக்ரோசாப்ட்நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். விரைவில் இதன் முழுமையான பாதுகாப்பானபதிப்பினை மைக்ரோசாப்ட் அதிகாரபூர்வமாக வெளியிட இருக்கிறது. முதலில்சோதனைத் தொகுப்புகள் வெளி வந்த போது இந்த புதிய பதிப்பு விஸ்டாவிற்கு மேக் அப் போட்டு வெளிவந்துள்ளது என்று பலர் எழுதி வந்தனர். ஆனால் தற்போது வந்துள்ள, வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கையில் விண்டோஸ் 7 பல்வேறு முனைகளில் பயனாளர்களுக்குப் புதிய வசதிகளைத் தந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் புதிய அம்சங்கள் இங்கே தரப்படுகின்றன.

1. முற்றிலும் மாற்றப்பட்ட டாஸ்க் பார்

மானிட்டர் திரையில் கீழாக நமக்க…