பிரபலமான எழுத்தாளர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ அமைப்பாளர்களும் உணவுகளில் இருக்கும் கொழுப்புதான், உடல் பருமன், இருதய நோய் மற்றும் இதர சுகாதாரக் கோளாறுகளுக்கு முக்கியக் காரணம் என்று பரவலாக கூறிவருகிறார்கள்.
ஆனால், இதற்கு முக்கிய காரணம் இன்சுலின்தான் என்பதற்கு புதிய ஆதாரங்கள் இப்போது கிடைத்துள்ளன. உடலினால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின்தான் உடலில் சீனியின் அளவை அதிகரித்து இருதய நோய்க்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
இன்சுலின் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளையும், அது எப்படி நோயை ஏற்படுத்துகிறது என்பதையும் பிளாங்குப் பயனீட்டாளர் குரல் இதழ் திரட்டியுள்ளது. அந்த விபரங்கள் அதிசயிக்க வைக்கின்றன.
இன்சுலின் என்பது சக்திமிக்க ஹார்மோன் வகையாகும். இது நாம் உண்ணும் சமயங்களிளெல்லாம் உடலினால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் அதிகமான உணவை உட்கொள்ளும் போது அல்லது அதிக சீனி அல்லது அதிக கார்போஹைடிரேட் உணவுகளை, குளிர்பானம், வெள்ளை ரொட்டி போன்றவற்றைச் சாப்பிடும் சமயங்களில் இன்சுலின் உற்பத்தி அதிகமாகிறது.
இந்த உணவுகளை சாப்பிட்டதுமே அவை குளுகோசாக மாறி இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இரத்தத்தில் சேரும் இந்தச் சீனியைச் சீர் செய்வதற்காக இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது.
குறைந்த இன்சுலின் நன்மை பயப்பதாகவும், அதிக இன்சுலின் தீமையைக் கொடுப்பதாகவும் இருக்கிறது.
இருதய நோய் ஏற்படுவதற்கு, உணவுகளில் உள்ள கொழுப்பை விட சீனியும், கார்போஹைடிரேட்டும் முக்கிய காரணமாகிறது. எஸ்கிமோக்களின் வாழக்கை முறையே இதற்குச் சான்று. அதிகமான கொழுப்பு உணவுகளைச் சாப்பிடும் இவர்களுக்கு மிகக் குறைவாகவே இருதய நோய், உடல் பருமன், இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.
அதிகமான மாவுச் சத்துச் சாப்பிடும்போது, இன்சுலின் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகின்றது. அதிக இன்சுலின் உற்பத்தி அதிகமான பாதிப்புகளை உடலில் ஏற்படுத்தும். இந்த உண்மை 70 ஆம் ஆண்டுகளிலேயே கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும் இக்கருத்து ஏனோ வலுப்பெறவில்லை.
அதிக இன்சுலின் உற்பத்தி நீரிழிவை மட்டும் ஏற்படுத்துவதில்லை. அது அதிகமான கொழுப்பைச் சேமித்து வைக்கவும், இரத்தத்தின் கொழுப்பு அளவு அதிகரிப்பையும், இரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இவை அனைத்தும் இருதய நோய்க்கு அழைத்துச் செல்லும்.
உங்களின் உடல் பருமனாகி எடை குறைவதற்கு சிரமமாக உள்ளதா? அல்லது உங்களின் இரத்த அழுத்தம், அல்லது கொழுப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறதா? இதற்கு இரத்தத்தில் சீனியும், இன்சுலினும் அதிகரித்துள்ளதே காரணமாக இருக்கலாம்.
இரத்தத்தில் அதிக சீனி சேர்வதைக் தடுப்பது எப்படி?
அனைத்து கார்போஹைடிரேட்டின் அடித்தளமே சீனிதான். உங்கள் உடலுக்குத் தேவையான கலோரியில் 60 விழுக்காடு கார்போஹைடிரேட் என்றால், நீங்கள் உங்களுடைய இரத்த நாளத்தில் முக்கால் பவுண்டு சீனியைச் சேர்க்கிறீர்கள் என்று பொருள்.
அனைத்து கார்போஹைடிரேட்டின் அடித்தளமே சீனிதான். உங்கள் உடலுக்குத் தேவையான கலோரியில் 60 விழுக்காடு கார்போஹைடிரேட் என்றால், நீங்கள் உங்களுடைய இரத்த நாளத்தில் முக்கால் பவுண்டு சீனியைச் சேர்க்கிறீர்கள் என்று பொருள்.
மாவுச்சத்துக்களில் (கார்போஹைடிரேட்டுகள்) இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று எளிதானது. மற்றொன்று கடினமானது. கடினமான கார்போஹைடிரேட் என்பது மாவுச்சத்து அல்லது நார்ச்சத்திலிருந்து கிடைப்பதாகும். இது பெரும்பாலும் தானிய வகைகள், காய்ந்த பட்டாணி, பீன்ஸ், சோளம், பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து கிடைப்பதாகும்.
எளிதான கார்போஹைடிரேட் என்பது பச்சரிசி, கோதுமை ரொட்டி சாக்லேட், சீனி பால், பழச்சாறு, சோடா போன்றவையாகும். எளிதான கார்போஹைடிரேட் சீக்கிரமாக குளுகோசாக மாறி, இரத்தத்தின் சீனி அளவை அதிகரித்து, அதிக இன்சுலின் உற்பத்தியைத் தூண்டிவிடும்.
கெட்ட வகையான குளுகோஸ், பச்சரிசி, வெள்ளைரொட்டி போன்றவை ஹெச்.டி.எல். (HDL) என்ற நல்ல கொழுப்பை உடலில் குறைத்துவிடுகின்றது. ஹெச்.டி.எல், எனப்படும் நல்ல கொழுப்பு இருதய நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
புழுங்கல் அரிசி, சம்பா கோதுமை, ரவை போன்ற நல்ல கார்போஹைடிரேட்டையும் கூட அளவுடன் உணவில் சேர்த்தால் போதும். புரத உணவையும் அளவுடன் தான் சாப்பிட வேண்டும். இப்படி வாழ்ந்தால் இன்சுலின் அளவு அதிகரிக்காது. இதனால் இருதய நோய், உடல் பருமன், கொழுப்பு மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்கள் நம் உடம்பில் இடம்பெற வாய்ப்புக் கேட்கமாட்டா.
Very nice and thanks for the info's
ReplyDeletevery nice info's
ReplyDelete