Posts

Showing posts from February, 2009

மக்களின் மீது மறைமுக வரி விதிப்பு ?

Image
பொருளாதார தேக்கத்திலிருந்து இந்தியா மீள்வதற்காக வரிச் சலுகைகள், வரி விலக்குகள், வரி குறைப்புகள், வரி தள்ளுபடிகள், வரி விடுமுறைகள் என்றெல்லாம் வாரி வழங்கப் படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த பொது மக்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிற் துறையினர் ஆகியோருக்கு மத்திய அரசு அளித்த அதிர்ச்சி வைத்தியம் இந்த "மறைமுக வரி விதிப்பு". இது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.


(Courtesy:econjournal.com)

ஒரு நாட்டின் அரசின் வரவு செலவில் ஏற்படும் "துண்டு" இறுதியாக அந்த நாட்டின் மக்களின் மீதுதான் மறைமுகமாக சாத்தப் படுகிறது. இந்த "துண்டிற்கு" வெவ்வேறு வடிவங்கள் உண்டு.

ஒரு அரசு தனது செலவிற்கு போதிய பணம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் கடைசியாக கை வைக்கும் இடம் மக்களின் (முக்கியமாக நடுத் தர, எளிய மக்களின்) "பாக்கெட்". காலபோக்கில் மக்களின் உபயோகப் பொருட்களின் மீது அதிகரிக்கப் படும் நேரடி மற்றும் மறைமுக வரிகள், போக்குவரத்து, குடிநீர் போன்ற அரசு நிறுவனங்களின் சேவை கட்டணங்கள் அதிகரிப்பு என்று அரசு தனது நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க மக்களிடமிருந்தே பணம் "வசூல்" செய்ய…

மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது...?

Image
ஒவ்வொருவருடைய மின் அஞ்சல் முகவரியிலும் "@" என்ற சின்னம் வருவது யாவரும் அறிந்ததே. இந்தச் சின்னம் எப்படிப் புழக்கத்தில் வந்தது?

மின் அஞ்சல் முகவரியில் முதன் முதலாக இந்த @ சிம்னத்தை உபயோகித்தது "ரே டாம்லின்ஸன்" (Ray Tomlinson) என்னும் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர். இவர் 1971ஆம் ஆண்டு முதலில் தனக்குத் தானே ஒரு மின் அஞ்சலை இந்தச் சின்னத்தை உபயோகித்து அனுப்பிக்கொண்டார்.

ஏன் இவர் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்? அவர் சொல்கிறார், " கீ போர்டில் அக்கரையுடன் பார்த்தேன் எவருடைய பெயரிலிலும் வராததும், குழப்பம் விளைவிக்காததுமாக சின்னம் இருக்கிறதா என்று, பின் இதைத் தேர்ந்தெடுத்தேன்." என்று சொன்னார்.


இந்த @ சின்னம் கம்ப்யூட்டர் கீ போர்டில் எப்படி இடம் பெற்றது? மொழி வல்லுனர்கள், எப்படி என்பதில், ஒத்துப்போகவில்லை. சிலர் நினைத்தனர், மத்திய காலத்தில் (Early Middle ages), துறவிகள் கையெழுத்துப் ப்ரதிகளை சிரமத்துடன் படிக்கும்பொழுது லத்தீன் மொழி வார்த்தை "ad", "at" or "towards" or "By" என்று பல அர்த்தங்களைக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

அநேக வல்…

இதயத்தை பாதிக்கும் உடற்பருமன்

உடற்பருமனால் இதயம் பாதிக்கப்படுகிறது என்றால் பலர் நம்பமாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை:
உடற்பருமன் உண்டாவதற்கு முக்கியக்காரணங்கள் என்று பார்த்தால், உடலில் சுரக்கும் ஹார்மோன் மாறுபாடுகள், வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, உணவு முறை ஆகியவையே முக்கிய இடத்தைப்பிடிக்கும். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும்.


ஹார்மோன் மாறுபாடுகள்:


உடற்பருமன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. வயது வித்தியாசமில்லாமல் எல்லாருக்கும் உண்டாகிறது.

ஆண்களுக்கு முன்னாலும் (வயிற்றுப் பகுதி), பெண்களுக்குப் பின்னாலும் (புட்டப் பகுதி) அதிகக்கொழுப்பு சேர்கிறது.
இதுவே ஹார்மோன் மாறுபாடுகளால் உண்டானால் உடல் பருத்திருக்கும்.

சில பெண்கள் பருவவயதில் கொடி இடை... அன்ன நடை, மதிமுகம், மதுக் கிண்ணம்... இப்படி வர்ணிக்கத்தக்க வகையில் அழகாக இருப்பார்கள். முப்பத்தைந்து நாற்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டால் அவர்களை பார்க்க சகிக்காது.

பூசணிக்காய் போல உடற்பருத்து, வாத்து நடையுடன் முட்டியைப்பிடித்துக் கொண்டு நடப்பார்கள். கொஞ்ச தூரம் நடப்பதற்கே பெருமூச்சு வாங்கும். இதற்கு காரணம் அவர்கள் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் என்ற பெண்மை இ…