வீழும் கோபுரங்கள்.

வீழும் கோபுரங்கள்

.
டிவி செய்திகளில் நியூயார்க் நகர இரட்டைகோபுரங்கள் விமானங்களால் தகர்க்கப்பட்டு புகை சூழ அவை விழுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் கோபுரங்கள் அப்படியே நின்றிருக்க உள்ளிருக்கும் பில்லியன் டாலர் நிறுவனங்கள் பொலா பொலாவென உதிர்வதை பார்த்திருக்கின்றீர்களா? இப்போதெல்லாம் வால் ஸ்டிரீட்டில் இது வாரம் தோறும் நிகழும் நிகழ்வாகிவிட்டது. விண்மீன்கள் விழுவதைப்போல நேற்று வரை ஜொலித்துக் கொண்டிருந்த நிதி நிறுவனங்கள் இப்போது காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு சொல்ல ஒன்றா இரண்டா?. அருமையான மென்பொருள் தீர்வுகளை வழங்க நம் மென்பொருள் வல்லுனர்கள் தயார்தாம், ஆனால் அதனை பயன்படுத்த அல்லது பயன்படுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் பெஸிமிஸ்டாய் சொன்னால் டெக்னாலஜி நிறுவனங்களுக்கும் தொலைவு அத்தனை வெளிச்சமாயில்லை.

1929 ஆம் ஆண்டுகளில் எட்கர் கேய்ஸ் (Edgar Cayce) என்பவர் தூங்கியவாறே வரும் காலத்தில் நடக்கப்போவதை புட்டு புட்டு வைத்துக்கொண்டிருந்தார். மிகப்பெரிய நிதிச்சிக்கல் ஒன்று வரப்போகின்றது. (a great disturbance in financial circles) அவரவர் பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு பத்திரமாக வைத்திருங்கள் என எல்லாருக்கும் அபய குரல் கொடுத்தார். நியூயார்க்கில் பங்கு வர்த்தகம் உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது. யாரும் அவரை நம்பத்தயாராயில்லை. ஆனால் நடந்தது என்ன? அவர் சொன்ன மாதிரியே ஆறே மாததில் நியூயார்க் பங்கு சந்தை மொத்தமாய் வீழ்ந்தது. மிகக்கொடூரமான Great Depression எனப்பட்ட உலகளாவிய பொருளாதார மந்த நிலைமைக்கு உலகம் தள்ளப்பட்டது. பெரும்பாலான மக்கள் வேலை இழந்தனர். வங்கிகளில் போடப்பட்டிருந்த தங்கள் பணங்கள் திரும்ப கிடைக்கவில்லை. சோற்றுக்காக வீடு கார் எல்லாவற்றையும் விற்கும் நிலமைக்கு ஆளாயினர். பசியும் பட்டினியும் எங்கும் நிலவியது. வாழ்வே சூன்யமாயிற்று இனிமேல் எழும்பவே முடியாதுவென்றிருந்த நிலையில் இந்த "மகா மந்த நிலமை"யிலிருந்து உலகை எழுப்பிவிட்டது எது தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள். இரண்டாம் உலகப்போர் தான். போர் வந்ததும் அதற்கான ஆயத்தங்கள் செய்ய, தளவாடங்கள் செய்ய அது இதுவென ஏகபட்ட வேலைவாய்ப்புகள் மீண்டும் உருவாகின. மக்களிடையே பணம் புரளத்தொடங்கியது. இப்படி கோடிக்கணக்கில் உயிர்களை கொள்ளை கொண்ட ஒரு உலகப்போரினால் உலகம் சகஜநிலமைக்குத் திரும்பியது.

அது மட்டுமல்லாமல் முதலாம் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் வரப்போவது பற்றியும் எட்கர் கேய்ஸ் முன்னமே சொல்லியிருந்தாராம். 2004ஆம் ஆண்டு இந்தியாவை தாக்கிய சுனாமியையும் எட்கர் கேய்ஸ் ""Watch for [strife] . . . in the Indian Ocean... " என 1941-லேயே சொன்னதாக சொல்கின்றார்கள்.

இப்படி நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே கூறும் அபூர்வ மனித சக்தியை Extrasensory perception (ESP) என்கின்றார்கள். ஆனாலும் விஞ்ஞானிகள் இன்னும் அதை நம்பத்தயாராயில்லை. அதற்கும் புதிதாய் அவர்கள் ஏதாவது துகள்கள் கண்டுபிடிக்கவேண்டும்.

1945ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று எட்கர் கேய்ஸ் தனது உடல் இந்தமாதம் ஐந்தாம் தியதி அடக்கம் செய்யப்படும் என உலகுக்கு முன்அறிவித்தார். அப்படியே நடந்தது.

Comments

  1. உங்கள் ஆய்வறிக்கை நன்றாக உள்ளது. எட்கர் கேயஸ் இப்போது நடந்து கொண்டிருக்கும் சரிவை பற்றி ஏதாவது சொல்லியிருக்காறா?

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி!
    இது எனது ஆயவறிக்கை கிடையாது, தலைப்பில் சொன்னது போல நான் படித்ததில் பிடித்தது, இது pக்ப் இன் வலைத்தளத்தில் வந்தது. மேலும், எட்கர் பற்றிய விவரங்களைத்தேடிக்கொண்டிருக்கிறேன், ஏதேனும் கிடைத்தால் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!

use tamileditor.org for post you comments in TAMIL.

Popular posts from this blog

அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்!

கலீல் ஜி(கி)ப்ரானின் - கடவுள்கள்

பூமியில் உள்ள மிகப்பெரிய பள்ளங்கள்!!