புள்ளிவிவரங்களுக்கேற்ப உலக நாடுகளின் வரைபடத்தை பெரிதாக்கியும் சிறிதாக்கியும் வெவ்வேறு அளவுகளில் வரைந்து பல விஷயங்களை நமக்கு எளிதாக புரியவைப்பதில் கில்லாடிகள் Worldmapper.org காரர்கள். அவர்கள் வரைந்திட்டுள்ள உலகவரைபடங்கள் பல கதைகளை சொல்லும்.
கீழே நீங்கள் காண்பது கிபி 1-ல் உலகின் ஐஸ்வர்யம் பொருந்திய நாடுகளின் மேப். இந்தியா என்னமாய் பெருத்திருந்திருக்கின்றதென பாருங்கள்.
அப்போதெல்லாம் மாதம் மும்மாரி பொழிந்திருக்கின்றது. செல்வச்செழிப்பில் இருந்திருக்கின்றோம். விலைமதிக்க இயலாத பொக்கிஷங்கள் இங்கிருந்தன. கோவில்களிலும் அரண்மனைகளிலும் இருந்த வேலைப்பாடுகளுக்கு விலை குறிக்க முடியாது. மயிலாசனம் முதல் கோகினூர் வைரம் வரை இங்கிருந்தன. வாசனை திரவியங்கள், யானை தந்தங்கள், பூம்பருத்தி ஆடைகள் இவற்றுடன் மயிலும் மிளகும் ஏற்றுமதி ஆயின. அவற்றிற்கு பதிலாக பொன்னும் மணியும் வந்து குவிந்தன. திரைகடல் ஓடியும் திரவியம் தேடினர். பலதுறைகளிலும் வல்லுனர்கள் இருந்தார்கள். இப்படி ”கிபி ஒன்றில்” இந்தியா பெருத்திருந்தது. அடுத்து நம்மை நெருங்கி வந்தது சீனா மட்டுமே. அமெரிக்காவும் ஐரோப்பாவும் அப்போது ஒல்லிப்பிச்சான்களாய் இருந்தன.
1835-ல் பாரதபூமியை சுற்றி பார்த்த ஒரு பிரிட்டீஷ்காரரின் வாக்குமூலத்தை பாருங்கள்.
இந்த நிலை கிபி 1500 வரை நீடித்தது.
அப்புறம் வந்த எந்திர தொழில்புரட்சி மேற்கை பருமனாக்கியது என்கின்றார்கள்.
1900-ல் உலகம் செல்வச்செழிப்பின்படி.
ஆப்ரிக்க நாடுகள் இன்னும் தேய்ந்து கழுதை கட்டெறும்பாகிக்கொண்டிருக்க 2015-ல் சீனா வீங்கி விட்டதையெல்லாம் மீட்டெடுக்கும் என ஆரூடம் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.
2015-ல் உலகம் செல்வச்செழிப்பின்படி.
source : http://pkp.blogspot.com/2008/10/0001.html
Comments
Post a Comment
கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!
use tamileditor.org for post you comments in TAMIL.