கரடி விடுறாங்க!

அமெரிக்க அதிபர் தியோடோர் ரூஸ்வெல்ட் பெரிய வேட்டைக்காரர்வேட்டையாட கிளம்பினார் எதையாவது வேட்டையாடம திரும்ப மாட்டாரு.
கரடியை வேட்டையாடுவது கவுரவமாக கருத பட்ட காலமா அது. அவரோட கெட்ட நேரமா இல்ல கரடியோட நல்ல நேரமானு தெரியல மூன்று நாட்கள் அலைந்து திரிந்தும் ஒரு கரடி கூட கிடைக்கவில்லை.எல்லா கரடியையும் சுட்ட எங்குட்டு இருந்து கரடி வரும் அதானால மனுஷன் இன்னிக்கி வேட்டை இப்படி வெத்து துப்பாக்கி மாதிரி போச்சு என்று ரொம்ப பீல் பண்ணுனாரு..... நெசமா..............................
அப்பறம் அவரோட படை (சொறி,சிரங்கு) காட்டை சல்லடை மாதிரிசலிச்சு காட்டுக்குள்ள சும்மா படுத்து கிடந்த ஒரு வயசான கரடியை கட்டி தர தர என்று இழுத்து வந்தார்கள் ரூஸ்வெல்ட் சுடுவதர்க்காக ஆனால் கரடியின் பரிதாப நிலையினை கண்ட ரூஸ்வெல்ட் அதை சுடவில்லை மேலும் அதை விட்டுவிடுங்கள் என்று கூறினார்.
இந்த சம்பவத்தை கேள்வி பட்ட, கிளிபோர்ட் பெரிமென் என்ற கார்டூனிஸ்ட், கழுத்தில் கயிறு கட்டப்பட்ட கரடி ஒன்றை ஒருவர் பிடித்து கொண்டு இருப்பது போலவும், ரூஸ்வெல்ட் அதனை சுட மறுப்பது போலவும் கார்டூன் ஒன்றை வரைந்தார். அது வாசிங்டன் என்ற பத்திரிக்கையில் வெளியானது.மறுநாள் வேறொரு பத்திரிகையில் வெளியான இந்த கார்டூனில் கரடி மிக சிறியதாகவும் மேலும் பயத்தில் நடுங்கிக்கொண்டு இருப்பது போலவும் இருந்தது.இந்த கார்டூனை மக்கள் வெகுவாக ரசித்தார்கள்.


மோரிஸ் மைக்டாம் என்பவரும் ரசித்தார் ஆனால் வித்தியாசமாக பட்டு துணி வைத்து கரடி பொம்மை செய்யும் அளவிற்கு. தான் செய்த கரடி பொம்மையை சாக்லட், பொம்மை விற்கும் தன்னுடைய கடையில் கார்டூன் உடன் சேர்த்து வைத்தார். இதை பார்த்த மக்கள் கரடி பொம்மை வாங்கினார்கள் மேலும் மேலும் மோரிஸ்க்கு கரடி பொம்மை ஆர்டர் வர துவங்கியது.

மோரிஸ் மைக்டாம் ரூஸ்வெல்ட்க்கு ஒரு கடிதம் எழுதினார் அதில் அவர் உருவாக்கிய கரடி பொம்மைக்கு தியோடோர் ரூஸ்வெல்ட் பெயரை வைக்க விருப்பபடுவதாக தெரிவித்தார். ரூஸ்வெல்டும் தனக்கு எந்த ஆட்சபனையும் இல்லை என்று கடிதத்திற்கு பதில் அனுப்பினார். 
மோரிஸ் தியோடோர் (theodore) என்பதை சுருக்கி "டெட்டி பியர்" (Teddy Bear) என பெயரிட்டு விற்பனை செய்தார். இன்று வரை பலரது "பெட் பார்ட்னராக" இருப்பது இந்த "கெட்டி பீர்" அய்யா மனிசுடுங்க "டெட்டி பியராக" (super figura) இருப்பது இந்த கரடி பொம்மை தான்.

Source  : http://madurainanpan.blogspot.com/2008/10/blog-post_4081.html

Comments