ஸ்டாக் மார்கெட்டும் குரங்கு வியபாரியும்.!

அன்று:

மச்சி நூறு ரூபாய்க்கு வாங்கின ஸ்டாக்கின் இப்போதைய மதிப்பு தெரியுமா?


ங்...

ஒன்று ஆயிரம் ரூபாய்...

வாவ்... எப்படிடா உட்கார்ந்த இடத்தில் இருந்தே இப்படி சம்பாதித்தே?


இன்று:
மச்சி என்ன சோகமா இருக்கெ?

ம்... ஆயிரம் ரூபாய்க்கு வாங்கின ஸ்டாகின் விலை இப்போ என்ன தெறியுமா?

என்னடா....

வெறும் ஒரு ரூபாய்! எல்லாம் இந்த "லேமேன் பிரதர்ஸ்" உடைந்ததால் வந்த வினை.

ங்...

ஓக்கே, எப்படி நூறு ரூபாய்க்கு வாங்கின ஸ்டாக் ஆயிரம் ரூபாவாகி, ஒரே இரவில் ஒரு ரூபாய்க்கு வந்தது? யார் அவ்வளவு கோடான கோடி ரூபாய்களால் லாபம் அடைந்தது? உங்களுக்கும் இதுபோன்ற கேள்விகள் எழுந்திருந்தால், தெளிவுபெற இந்த "குரங்கு வியபாரி" கதையைப் படிக்கவும்.

* * *

ஒரு ஊரில் ஒரு குரங்கு வியபாரியாம், அவன் ஒரு நாள் ஒரு குரங்குக்கு 10 ருபாய் தருவதாக அறிவித்தான். அக் கிராம மக்களோ சும்மா தொல்லை தருகின்ற குரங்குதானே என்று அதை பிடித்து அந்த வியபாரியிடம் விற்றார்களாம். ஒரு மாதத்திற்கு பிறகு அந்த வியபாரி ஒரு குரங்குக்கு 500 ரூபாய் என அறிவிக்க, கிராமமக்களோ செய்யும் வேலையும் விட்டு விட்டு முழு நேர குரங்கு பிடிக்கும் தொழில் இறங்க, அக்காட்டில் குரங்கு கிடைப்பதே அபூர்வமானதாம்.

இப்படியே ஒரு நாள் அந்த வியபாரி, ஒரு குரங்குக்கு 1000 ரூபாய் தருவதாக அறிவிக்க, மொத்த கிராமமே குரங்கு பிடிக்க அலையாய் அலைந்தும், ஒரு குரங்கைக் கூட பார்க்க முடிய வில்லையாம்.

அந்த நேரம் பார்த்து அந்த வியபாரி மொத்த குரங்கு கொள்முதலையும் தன் உதவியாளனிடம் விட்டுவிட்டு வெளியூர் சென்றானாம்.

குரங்கு கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்க, அந்த உதவியாளன் ஒரு உபாயம் செய்தானாம். அவன் தன் முதலாளிக்குத் தெறியாமல் மக்களிடம் ஒரு குரங்கு 800 ரூபாய்க்கு விற்க தாயார் என்று அறிவிக்க, ஊரே அல்லோகலப்பட்டது. தன் ஆடு, மாடு, வீடு, தோடு என்று எலாவற்றையும் விற்று, குரங்கு வாங்கி, அந்த குரங்கு வியபாரி வந்ததும் அவனிடம் விற்று பெரிய இலாபம் சம்பாதிக்கும் கனவில் இருக்க. நடந்ததெ வேறு.

அந்த குரங்கு வியபாரியும் அவன் உதவியாளனும் அந்த ஊர் பக்கமே திரும்பவில்லையாம். மக்கள் விலைமதிப்பில்லா குரங்குகளோடு மல்லுக்கட்டுவதாக செய்தி!

மாரல் ஆஃப் த ஸ்டோரி:
ஸ்டாக் மார்க்கெட் பற்றி முழுமையாகத் தெறியாமல் அதில் முதலீடு செய்யக் கூடாது. வாங்கி விற்பது சுலபம், ஆனால் சரியான நேரத்தில் வாங்கி, சரியான நேரத்தில் விற்பது கடினம், மிக மிக கடினம்.

மூலம்: எங்கேயோ படித்தது!

Source : http://rajakumaaran.blogspot.com/2008/10/blog-post_21.html

Comments

Post a Comment

கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!

use tamileditor.org for post you comments in TAMIL.