ஒரு நாடு, ஒரு உலகம் ‍ ‍ சர்வ நாசம்.!

Greed is a bottomless pit which exhausts the person in an endless effort to satisfy the need without ever reaching satisfaction.

Erich Fromm (1900–1980), U.S. psychologist. Escape from Freedom, ch. 4 (1941).

இன்னி தேதிக்கு ஹாட் டாபிக் பேங்குகள் திவாலாகறதும், அத வால் புடிச்சு வந்திருக்கற பொருளாதார நெருக்கடியும். அப்பிடி என்னதான் ஆச்சு ராத்திரியோட ராத்திரியா? ஏன் எல்லாரும் ஒரு நா காலங் காத்தால திடீர்னு மஞ்சக் காய்தம் குடுத்துட்டு தலைல முக்காடு (அவிங்களுக்கு இல்ல, நமக்கு... அதுவும் நம்ம கோமணத்தயே உருவி !!) போட்டுட்டு போயிட்டாங்க? தென்ன மரத்துல தேள் கொட்டுனா பன மரத்துல நெறி கட்ற மாதிரி அமெரிக்காவுல பேங்க் திவாலானா ஆஸ்திரேலியாவும் ஐரோப்பாவும் ஏன் மருந்து போட்டுக்கறாங்க? நாலு பக்கம் விசாரிச்சுப் பாத்தப்பறந்தான் ஓரளவுக்கு புரிஞ்சது (அப்பிடின்னு நான் நெனச்சுக்கிட்டுருக்கேன்). சரி நமக்கு புரிஞ்சத ஒரு பதிவாப் போட்டோம்னா இன்னும் நாலு பேரு தலயப் பிச்சுக்கிட்டு திரியலாம்... நமக்கும் கம்பெனி வேணுமே.

மொதல்ல இது திடீர் வீழ்ச்சியே கிடையாது. கிட்டத்தட்ட ஒரு வருஷமா கரையான் அரிக்கிற மாதிரி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா நடந்துருக்கு. முதலீட்டு ஆராய்ச்சியாளர்கள், ஆலோசகர்கள், வங்கிகள், கடன் குடுக்கறவங்க, வாங்கறவங்க, சில்லரை/பெரு முதலீட்டாளர்கள் அப்பிடின்னு பல "எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்கள்" இந்த இன்னிய நெலமைக்கு பொறுப்பு. இன்னும் கொஞ்சம் கீழ போய் பாத்தா.... ஒரே ஒரு காரணம்தான்.....பேராசை.

நம்ம எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கு. நமக்குன்னு ஒரு வீடு வாங்கிறணும். இந்தக் கனவை ரொம்ப கச்சிதமா எக்ஸ்ப்ளாய்ட் பண்ணப் போய் இன்னிக்கு இவ்வளவு சீரழிவுல நிக்கறோம். நம்ம ஊர்ல ஒருத்தன் வீட்டுக்கடன் வேணும்னு கேட்டா, என்ன வேலை பண்றோம், என்ன சம்பளம் வாங்கறோம், என்ன செலவு பண்றோம், எவ்வளவு சேத்துருக்கோம் / சேத்து வெக்கறோம், குடும்ப சூழ்நிலை எப்பிடி, ஜாதகம் நல்ல இருக்கா, கடன திருப்பிக் கட்டுவானா, ஜாமீன் யாரு, பெரிய வீடு எவ்வளவு, சின்ன வீடு எவ்வளவு அப்பிடின்னு எல்லாம் பாத்துட்டு திருப்தி இருந்தாத்தான் பேங்க் கடன் தருது. இல்லயா? (இல்லயா??? !!!) அமெரிக்காவுலயும் இப்பிடித்தான் நடந்துக்கிட்டு இருந்துது. ரெண்டு வருஷம் முன்னாடி வரைக்கும். சில மாகானுபாவனுங்க ரூம் போட்டு யோசிச்சாங்க. இப்பிடியே போனா மார்க்கெட் எப்ப பெருசாறது, எப்ப நெறய காசு பாக்கறது? என்ன பண்ணலாம்? சரி. அடிப்படையான ஒரு அனுமானம் பண்ணிக்குவோம். அதாவது வீட்டுல போடற காசு கண்டிப்பா வளரும், குறையவே குறையாது அப்பிடின்னு தீர்மானம் போட்டங்க. ஆச்சா? இந்த (வரட்டு) சித்தாந்தத்தை சந்தைல எப்பிடி கொண்டு போய் சொருகறது? தகுதி இருக்கோ இல்லயோ, எல்லாருக்கும் கடனக் குடு. கொஞ்சம் சலுகைகள், குறந்த வட்டி, சந்தைக்கு தகுந்த மாதிரி மாறுகிற வட்டி விகிதம் (Variable Interest Rate) அப்பிடின்னு அள்ளி வீசு. எல்லாரும் வீடு வாங்கட்டும். டிமேண்ட் அதிகமாகும். வீடுகளோட மதிப்பு அதிகமாகும். கொஞ்ச நாள்லயே நெறய காசு பண்ணலாம். இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம். இது மாதிரி குடுக்கற கடனுக்கு அந்த சொத்துதான் அடகு. இந்த அடகுகளையெல்லாம் பண்டில் பண்டிலாப் பண்ணி "அடகு பின்நிறுத்திய பங்குகள்" (Mortgage Backed Securities MBS) அப்பிடின்னு பண்ணினாங்க. அந்தப் பங்குகள பங்குச் சந்தைல வித்தாங்க. சாதாரணமா கம்பெனி பங்குகள் வாங்கற மாதிரி, இதுகளையும் பேங்குகளும், சின்ன/பெரிய முதலீட்டாளர்களும் வாங்கி குவிச்சாங்க. மத்த பங்குகள விட இதுல லாபம் நெறய கிடைச்சுது. எல்லாம் கொஞ்ச நாளைக்குதான். கடன் குடுத்த கம்பெனிக்கு பங்குகளை வித்தா பணம் திரும்ப கெடச்சுரும். கடன் வாங்கினவன் பணத்தை திருப்பி குடுக்க குடுக்கத்தான் அடகு ஸ்டெடியா இருக்கும். ஆனா கடன வாங்கினவங்கள்ல பாதிப் பேரோட செக்குக மொத மாசத்துல இருந்தே திரும்பி வர ஆரம்பிச்சுது. இன்னும் கொஞ்சம் சலுகை குடுக்கறது, அடகை மாத்தி விடறதுன்னு என்னென்னமோ குட்டிகரணம் போட்டுப் பாத்தாங்க. அப்பறம் வேற வழியில்லாம, கடன்காரனை வெரட்டி விட்டுட்டு சொத்தெல்லாம் விற்பனைக்கு வந்துது. இப்ப சப்ளை அதிகமாக ஆரம்பிச்சுது. விலை தானா குறைய ஆரம்பிச்சுது. MBS வாங்கினவங்க பாடு திண்டாட்டமாயிருச்சு. பங்குக்கு பின்னால இருக்கற அடகுகளோட மதிப்பு குறைஞ்சதால பங்கோட விலையும் சரிஞ்சுது. அதனால வந்த வரைக்கும் லாபம்னு பங்குகளை விக்கலாம்னா சந்தைல இது மாதிரி ஏகப்பட்டது விற்பனைக்கு இருக்கு. இன்னும் சரிவு. சொத்து விலையும் குறையுது, பங்கு விலையும் சரியுது. போட்ட முதலுக்கே மோசம்னு ஆயிருச்சு. Avalanche Effect மாதிரி பெரிய...பெரிய்ய்ய்ய்ய்ய சரிவு. பில்லியன் கணக்குல மதிப்பு இருந்த சொத்தெல்லாம் சில மில்லியன்கள், சில ஆயிரங்கள்னு படு பயங்கரமா சரிஞ்சாச்சு. என்னதான் தலை கீழா தண்ணி குடிச்சாலும் இந்த சரிவுல ஆகற நஷ்டத்தை குறைக்கவே (hedge) முடியாது.

இன்னொரு பக்கத்துல, இந்த அடகுப் பங்குகளை வாங்கின கம்பெனிக எல்லாம் இத தங்களோட சொத்து (asset) கணக்குல காமிச்சதால அவங்க கம்பெனியோட பங்குகள் விலையும் ஏறிடுச்சு. மத்த நாடுகள்ல (குறிப்பா ஜப்பான், சைனா) இருக்கற முதலீடு கம்பெனியெல்லம் அமெரிக்க பேங்குகளோட பங்குகளையோ அல்லது அமெரிக்க பேங்குகள் மூலமா அடகுப் பங்குகள்லயோ பெரிய அளவுல வாங்கி முதலீடு செஞ்சு வெச்சுருந்தாங்க. அவங்களுக்கும் தாங்க முடியாத அளவுக்குப் பெரிய அடி.

எங்கியோ அமெரிக்கவுல சில பேரு பேராசை புடிச்சு திருப்பித் தர முடியாதவனுக்கு (sub-prime) எல்லாம் கணக்கில்லாம கடன் குடுக்கப் போக, இன்னிக்கு உலகம் பூரா பேங்குக திவாலாகற சூழல். இத சரி பண்ண கெவுர்மெண்டுக எல்லாம் பில்லியன் பில்லியனா பணத்தை கொட்டறாங்க. யார் பணத்த? நம்ம வரிப் பணத்தை. இந்த பேராசை புடிச்ச பேங்குகளும் கம்பெனிகளும் கொள்ளை கொள்ளையா சம்பாதிச்சப்ப நமக்கு ஒரு பைசா கிடைச்சதில்ல. இப்ப அவங்களோட அறிவுஜீவித் தனத்தால ஆன நட்டத்தை சரிக்கட்ட நம்ம வரிப்பணமெல்லம் தண்ணி மாதிரி செலவழியுது. என்ன கொடுமை சரவணன் சார்? இதெல்லாம் சரியாக இன்னும் 3 குவாட்டர் ஆகும் 4 குவாட்டர் ஆகும்கறாங்க. அதான் ஃபுல்லா ஊத்தி மூடிட்டாங்களே. இங்க பணத்தப் போட்டு நட்டமானவனுக்கு இப்ப ஒரு 90 கட்டிங்குக்கே லாட்டரி.

இதுதான் எனக்குப் புரிஞ்சு சிம்பிளா சொல்ல முடிஞ்சது. (இதுல எதாவது தப்ப இருந்தா விசயம் தெரிஞ்ச மக்கள் தயவு செஞ்சு சரி பண்ணிடுங்க.)இன்னும் இதுக்குப் பின்னால இன்னமும் சிக்கலான வியாபாரங்கள் நிறைய இருக்கலாம். Derivatives, Options, Oil Futures, Commodity Futures, Structured Products...இப்பிடி நிறைய.... இதெல்லாமும் இந்த நெருக்கடிக்கு எப்பிடி துணை போச்சு, எப்பிடி உலக அளவுல திடீர்னு விலைவாசி உயர்வுக்கு ஏணி வெச்சுக் குடுத்துதுன்னு இன்னொரு நாள் சாவகாசமா கொழப்பறேன்.

பேராசை பெரு நஷ்டம்

Greed brings grief.

Source : http://thuklak.blogspot.com/2008/10/blog-post_15.html

Comments

Popular posts from this blog

அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்!

கலீல் ஜி(கி)ப்ரானின் - கடவுள்கள்

MLM - பல்லடுக்கு வியாபாரம் - கவனம் தேவை...!!!???