''Couvade syndrome'' - ஆண்களுக்கு வரும் மசக்கை


(டிஸ்கி - டாக்டரம்மா....நான் சொல்ற மேட்டர்ல தப்பிருந்தா கண்டுக்காம ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு விட்டுடுங்க.....சபையில் கால வாரி விட்டறாதீங்க.)

மாப்பிள்ளைகளெல்லாம் ஒரு உம்மைய சொல்லோனும். ..பொய் சொல்லாம, வெக்கப் படாம சொல்லனும். Yester year மாப்பிள்ளைகளுக்கெல்லாம் டைம் தர்ரேன் யோசிச்சு சொல்லுங்க.

இது தான் மேட்டர். தங்கமணி கருவுற்றிருக்கும்போது, இந்த மார்னிங்க் சிக்னஸ் னு சொல்லுவாங்களே அது உங்களுக்கும் இருந்துச்சா..

அட அமாங்க நெசமாத்தான். மனைவி கர்பமா இருக்கும் போது, மூனாவது வாரத்துல இருந்து கணவனுக்கும் இது மாதிரி '' morning sickness'' வரும்னு ஒரு கருத்து இருக்கு. இதுக்கு பேர் ''Couvade syndrome''. Couvade (to hatch) ஒரு ஃப்ரென்ச் வார்த்தை. ( இது தான் எங்களுக்கு தெரியுமேனு சொல்றவுங்க, உங்களுக்கு இப்படி இருந்துச்சானு மட்டும் சொல்லுங்க)

இது மேலை நாடுகள்ல தான் நிறைய இருக்குன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது. அது எப்படி??....அப்ப நம்ம ஊர்ல ரங்கமணிக எல்லாம் தங்கமணிகள் மேல அக்கறை இல்லையா என்ன?...நீங்க தான் சாமி சொல்லோனும்.

Now jokes apart..இப்ப இந்த சின்றோம் இன் அறிகுறி என்னன்னு பார்க்கலாம். எடை கூடுதல், வயிறு குமட்டல், தூக்கம், அதிகமான பசி போன்ற மாற்றங்கள் கணவனுக்கு ஏற்படுமாம்.

இப்படி ஒன்னு இருக்குறத பலர் ஒத்துகறதில்லை. ஆனா ஆதாரத்துக்கு ஆராய்ச்சி முடிவுகள் பல இருக்கு. இதுல முக்கியமான விஷயம் பல நாட்கள் குழந்தைகள் இல்லாம இருந்து பிறகு இந்த பாக்கியம் கிடைத்த ஆண்களுக்கு இது மாதிரி பெரும்பாலும் நடக்கும்னு ஆராய்ச்சி சொல்லுது.

மனைவிக்கு கர்பகாலத்துல ஏற்படுற சில கஷ்டங்களைப் பார்த்து ஆண்களுக்கு மனசுல ஏற்படுற கலக்கம் தான் இதுக்கு அடிப்படை காரணம்னு கருதப்பட்டாலும்..இன்னும் நிறைய காரணங்கள் இருக்கு.

இந்த சிம்பதி பெயின் (Sympathy pain) உளவியல் சம்பந்தப்பட்ட ஒன்றாக இருந்தாலும் ஹார்மோன் மாற்றங்களும் இருக்கத்தான் செய்கிறது என்றும் சில ஆராய்ச்சிகள் சொல்லுது. உளவியல் அல்லாமல் உடலியல் மாற்றங்களினால் மட்டுமே ஏற்படக்கூடிய அறிகுறிகளும் பலருக்கு ஏற்படறதுனால இதுல ஹார்மோன்களுக்கும் பங்கு இருக்குன்னு சொல்றாங்க. தன்னோட வாரிசுங்குற ஒரு பெருமை, தானும் இதுல பங்கெடுத்துக்கனும்னு ஆசை இது போல பல காரணங்கள்.

ஆராய்ச்சியில கலந்துக்கிட்ட கணவன்மார்கள் '' எங்களுக்கும் இது மாதிரி மாற்றங்கள் ஏற்பட்டது பெருமையா இருக்குது'' ன்னு சொல்லி இருக்காங்க. இது மனைவிமார்களுக்கு தெரிய வரும்போது ரொம்ப சந்தோஷப் பட்டாங்களாம்.



இது பல ஆராய்ச்சியில நிருபனம் ஆகியிருந்தாலும் இதற்கான சரியான காரணம் ஒரு முடிவுக்கு வராமதான் இருக்கு


Source : http://manggai.blogspot.com/2007/08/couvade-syndrome.html

Comments