நீரிழிவு நோயின் ஒன்பது முன் அடையாளங்கள்: Diabetes Symptoms!

நீரிழிவு நோய் கிட்டத்தட்ட எல்லோராலும் பொதுவாகவே டேக் இட் ஈசியாக எடுத்துக் கொள்ளப்படும் வியாதிகளில் ஒன்று. ஆனால், இதன் தாக்கத்தின் விளைவு நாம் நினைப்பதனைக் காட்டிலும் மோசமான நிலையில் தலை முதல் கால் வரை கிட்டத்தட்ட எல்லா உறுப்புகளையும் சிறிது சிறிதாக செயலிழக்க வைத்து இறுதியில் மரணமே முடிவாக நிகழ்த்தி விட்டுச் சென்று விடுகிறது.

நேற்று ஒரு ஆர்வமூட்டு கட்டுரை ஒன்று இதன் பொருட்டு வாசிக்க நேர்ந்தது அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப் பதிவு. நீரிழிவு நோய் பற்றிய விரிவான கட்டுரையை வாசிக்க நம்ம பத்மா அர்விந்தின் பதிவிற்கு சென்றால் காணலாம்.

இங்கே நீரிழிவு நோய் இருக்க நேரிடின் அல்லது எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது எது போன்ற முன் அடையாளங்களாக காட்டிக் கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம்.

1. கண் புருவத்தின் நிறம் - (Eyebrow Color):

உடல் ரோமங்கள் பொதுவாகவே நரைக்க ஆரம்பித்துருக்கும் பட்சத்தில் கண் புருவம் மட்டும் மறுத்தால், நீரிழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்பதிகமாம்.

2. மார்பக அளவு(பெண்களுக்கு) - (Breast Size):

பெண்களில் இருபது வயதடையும் பொழுதே D அளவிற்கும் பெரிதான உள்ளாடை அணிய நேர்ந்தால், சக வயதில் அதனை விட சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண் நண்பிகளைக் காட்டிலும் அதிக வாய்ப்பிருக்கிறதாம் இவ் நோய் தாக்க. ஏனெனில், மார்பக எடை வந்து ஆளின் உயரம் மற்றும் எடைக்கு (BMI = Body Mass Idex) சம்பந்தமில்லாத வகையில் தனியாக கணக்கிடப் படுவதால் அப்படி எடுத்துக் கொள்ளப் படுகிறதாம்.

3. பிறந்த மாதம் அல்லது காலம் - (Birth Month or Season):

குழந்தை பிறந்த மாதத்திற்கும் நீரிழிவு நோயின் தாக்கத்திற்கும் ஏதோ காரணமில்லா காரணமிருப்பதாக பத்து ஆயிரம் குழந்தைகளில் நடத்திய ஆய்வுகளில் கண்டிபிடிக்கப் பட்டிருப்பதாக அட்லாண்டாவை மையமாக கொண்ட நோய் தடுப்புக் கழகம் (Center for Disease Control - CDC) கண்டறிந்திருக்கிறதாம். இதில் இலையுதிர்(Fall) காலத்தில் பிறந்த குழந்தைகளைக் காட்டிலும் வசந்த(Spring) காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் அதிகமுள்ளதாம் அதுவும் வட மாநிலங்களில் பிறந்த குழந்தைகளில். காரணமாக தற்காலிகமா தாய் உட் கொள்ளும் உணவும், மேல் விழும் சூரியக் கதிர்களின் அளவீடுமாக கருதப் படுகிறது.

4. காது கேளாமை - (Hearing Loss):

இதற்கு முன்னால் இது வரையிலும் காது கோளாமையை நீரிழிவு நோயுடன் சம்பந்தப் படுத்தி பார்த்தது கிடையாதாம். ஆனால், இப்பொழுது நீரிழிவு நோயல் பீடிக்கப் பட்டவர்களுக்கு அதிக அளவில் காது கேளாமை நிகழும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

5. குறுகிய கால்கள் - (Short Legs):

குறுகிய கால்களைப் பெற்றவர்களுக்கு நீண்ட கால்களை பெற்றவர்களைக் காட்டிலும் அதிகமான வாய்ப்புகள் நீரிழிவு வகை - 2 தாக்க வாய்ப்புள்ளதாம்.

6. மெதுவாக புண் ஆறும் தன்மை - (Slow-healing Cut):

இரண்டாம் வகை நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு பொதுவாக புண் ஆறும் காலம் சற்று கால தாமதமே ஆகும், இந்த நிலைக்கு Atherosclerosis என்று பெயராம். இதனில் என்ன நடைபெறுகிறதெனில் ரத்த குழாய்கள் தடித்து விடுவதும்(thickening), இரத்தச் செல்கள் இளகுவதும்(thinning) நடைபெறுவதால், ஒரு புண் ஏற்படும் பொழுது அங்கே இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டுக்கள் அதிகளவில் பாதிக்கப் பட்ட இடத்திற்கு சென்று சண்டையிடும் நிலை குறைந்து போன நிலையில் புண் ஆறும் காலம் அதிகமெடுத்து கொள்கிறதாம்.

7. பல் இழப்பு - (Tooth Loss): மற்றும்

8. ரோம இழப்பு - (Hair Loss):

இங்கும் நமது 6வது அடையாளத்தில் பேசப்பட்ட Atherosclerosis நடைபெறுவதனாலும், அதன் மூலமாக பிராணவாயுவேற்றமும் குறைவதனாலும் விரைவாக கலக்க முடி இருக்கும் நிலைக்குப் செல்வதும் இவ் நோய் இருப்பதற்கான அறிகுறியாம்.

9. பூச்சிக்கொல்லியினால் விளைவு - (Pesticide's Exposure):

அதிகப் படியான பூச்சிக்கொல்லிகளில் கிடந்து உழல்பவர்களுக்கும் இவ் நோய் தாக்கும் அபாயக் கூறுகள் அதிகம் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.



பி.கு: மேலே கூறப்பட்டுள்ள ஒன்பது முன் அறிவிப்பு நோய் அடையாளங்களில் ஒன்றிரண்டு நம்மில் பலபேருக்கு சாதரணமாகவே காணப் பெறலாம்... உ.தா: ரோம உதிர்வு, காது கேளாமை, பல்லிழப்பு போன்றவைகள் அதனால் இவைகள் காணப்பட்டால் அபாய மணி அடித்து விட்டதாக பொருள் கொள்ள வேண்டியதில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும், இரத்தம் சார்ந்த சர்க்கரை அளவு கண்டறிந்தால் நல்லா நிம்மதியா தூங்கலாம் போல


Source : http://thekkikattan.blogspot.com/2008/07/diabetes-symtomps.html

Comments