இளமை காக்க எளிய வழிகள்!


இளமை காக்க எளிய வழிகள் – கே.எஸ்.சுப்ரமணி
ஆறு யோசனைகள்
மன்னிப்பது நல்லது!
பிறரைக் குறை கூறிக்கொண்டோ அல்லது திட்டிக் கொண்டே தங்கள் வேலைகளை நாள் முழுவதும் சிலர் பார்ப்பார்கள். இவர்களுக்கு வயிறு சம்பந்தமான கோளாறுகள் வரும். இந்தக் கோளாறு இருந்தால் உங்களுக்குக் கெடுதல் செய்தவர்களை உடனடியாக மனப்பூர்வமாக மன்னித்து மறந்துவிடுங்கள். மருந்து இன்றியே வயிற்றுக் கோளாறுகள் இதனால் விரைந்து குணமாகும் நம்புங்கள்.
வாந்தி வருவது போல் இருந்தால்…
வயிற்றுக் கோளாறுகளை முன்கூட்டியே தடுக்க ஒவ்வொரு வேளை உணவிற்குப் பிறகும் உலராத ஓர் இஞ்சித்துண்டு சாப்பிடவும். இதே போல வாந்தி வருவதை நிறுத்த, உலர்ந்த சிறிய இஞ்சித்துண்டை உப்புடன் சாப்பிடவும். எப்படிப்பட்ட வாந்தியும் உடனே அமைதியாகி ஓயும்.
உடல் நாற்றம் நீங்க…
மழைக்காலத்தில் வேப்ப இலையை அரைத்து இரண்டு டீஸ்பூன் அளவு அந்தத் துவையலை குளிக்கும் தண்ணீரில் கலக்கிவிட்டுக் குளிக்கவும். இது உடல் நாற்றத்தைப் போக்கும் (வேப்ப எண்ணெய்தான் நாறும்). தோலில் எரிச்சல் குணமாகும். வீட்டில் பூச்சிகள் இருந்தால் அது உங்களைக் கடிக்காது.
விரல் சுட்டுவிட்டால்!
சூடான பாத்திரங்களை அடுப்பில் இருந்து இறக்கும்போது விரல்கள் சுட்டுவிட்டால் ஐஸ் துண்டுகளை அந்த இடத்தில் வைக்கவும். இதனால் கொப்பளமும் வராது. ரெப்ரிஜிரேட்டர் இல்லாதவர்கள் உடனடியாகப் பக்கத்து வீட்டிலாவது ஐஸ் துண்டுகளைப் பெறுவது நல்லது.
திரைப்படப் பாடல்களால் உடல் நலம் உண்டு!
நல்ல உடல் நலம், நல்ல மனவளம், ஆழ்ந்த அமைதி, எளிதில் ஓய்வு எடுக்க, ஆழ்ந்த தியானம் செய்ய, படுத்து உடனே தூங்க 1,250 ரூபாயில் ஒரு காம்பாக்ட் டிஸ்க் வந்துள்ளது. இதில் கர்நாடக இசைதான் உள்ளது. ஆன்ட்ருவெல் என்பவர் ஆராய்ந்து ஒலிப்பதிவு செய்த இசைத்தொகுப்பு இது.
மறதி வியாதி மறைய…
வயதானவர்களுக்கு வரும் மறதியிலிருந்து விடுபடத் தினமும் வைட்டமின் ‘ஈ’ மாத்திரையைச் சாப்பிட வேண்டும். அளவு : 2000 சர்வதேச யூனிட்டுகள். சற்று அதிகமாகச் சாப்பிட்டாலும் கெடுதல் இல்லையாம். ஆனால், டாக்டர்தான் மாத்திரை அளவை முடிவு செய்ய வேண்டும். அமெரிக்காவில் உள்ள தேசிய முதியோர் நல அமைப்பினர் இரண்டு ஆண்டுகளாக இதே அளவு கொடுத்துவந்தால் பல ஞாபக மறதி நோய்க்காரர்கள் நன்கு குணம் பெற்றனர்.
வாழ நினைத்தால் வாழ முடியும்!
குண்டு பாய்ந்தும் 76 வயது வரை நலமாக வாழ்ந்த மனிதர்!
1822ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாள்… வில்லியம் ப்யூமண்ட் என்ற இயவயதுக் கனடா இராணுவ டாக்டருக்கு அவசரத் தொலைபேசி அழைப்பு.
18 வயதான அலெக்ஸிஸ் செயின்ட் மார்ட்டின் என்ற விலங்குகளின் தோல்களை விற்கும் வியாபாரி ஒருவர் மீது எதிர்பாராத விதமாகக் குண்டு பாய்ந்துவிட்டது என்ற தொலைபேசித் தகவலைத் தொடர்ந்து டாக்டர் ஓடினார்.
மக்கள் அதிகமுள்ள கடைவீதியில் சுடப்பட்ட இந்த வியாபாரி பிழைத்திருக்கவே முடியாது. காரணம், இடப்பக்கம் இடுப்பு எலும்புக்கு மேல் பெரிய அளவு ஓட்டை ஏற்பட்டு அந்த இடமே வெந்து கருகிக் காணப்பட்டது. டாக்டர் அந்த இடத்திலேயே இரத்தத்தைக் கொடுத்து, 36 மணி நேரத்திற்குள் வியாபாரி இறக்க நேரிடலாம் என்று கூறிவிட்டார்.
ஆனால், மார்ட்டின் பிழைத்து எழுந்தார்! ஓர் அங்குலம் அளவுக்கு இடுப்புக்குக் கீழ் அகலமான ஓட்டை ஆழத்தில் வயிற்றுத் தசையின் கடைப் பகுதியும் தெரிந்தது. 76 வயதுவரை இந்த ஓட்டையுடன் நலமாக வாழ்ந்தார். மிருகங்களை கண்ணி வைத்துப் பிடித்து தோல் வியாபாரமும் செய்தார்.
வயிற்றில் உள்ள ஓட்டையுடன் எப்படி நலமாக வாழ்ந்தார்? காய்ச்சல் என்று இவர் படுத்ததே இல்லை. மேலும், இவர் சாப்பிட்ட உணவும் எப்படி சரியாக ஜீரணமானது? முக்கியமாக பெரிய ஓட்டையுடன் காணப்பட்ட இவர், அடுத்த 58 ஆண்டுகள் வாழ்ந்தது எப்படி? அதிசயம்தான்!
http://www.tamilvanan.com/content/healthy-life-2/

Comments

Popular posts from this blog

கலீல் ஜி(கி)ப்ரானின் - கடவுள்கள்

அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்!

MLM - பல்லடுக்கு வியாபாரம் - கவனம் தேவை...!!!???