என்ன ஒரு புத்திசாலித்தனம்.....!!!

சொர்க்கத்துல ரொம்ப போர் அடிச்சதுனால அங்க இருக்குற சைன்டிஸ்ட்

எல்லாரும் சேர்ந்து கண்ணாம்பூச்சி ஆடலாம்னு முடிவு

பண்ணாங்களாம்(வேற விளையாட்டே கெடக்கல போல)...
சாட் பூட் திரி எல்லாம் போட்டு முடிஞ்சப்போ ஐன்ஸ்டீன் தான்

கண்ணபொத்தனும் மத்த எல்லாரும் ஓடிப்போய் ஒழிஞ்சுக்கனும்னு

முடிவாச்சு..


அவரும் கண்ண மூடிட்டு 1,2,3...அப்படின்னு எண்ண ஆரம்பிச்சுட்டார்...

எல்லாரும் போய் ஒழிஞ்சுக்கிட்டாங்க..ஆனா நம்ம நியுட்டன் மட்டும்

அப்படி பண்ணாம ஒரு 1 ஸ்கொயர் மீட்டர்ல ஒரு சதுரம் வரஞ்சுட்டு

அதுக்குள்ள நின்னுக்கிட்டார்.


இபப ஐன்ஸ்டீன் 100 எண்ணிட்டு கண்ண தொறந்து பார்த்தா...கண்ணு

முன்னால நியுட்டன் நின்னுக்கிட்டு இருக்குறாரு..ஐன்ஸ்டீனுக்கு

இருக்க முடியல...ஹேய் நியுட்டன் அவுட்..நியுட்டன் அவுட்டுன்னு கத்த

ஆரம்பிக்கிறார்..


ஆனா நியுட்டன் நான் அவுட் இல்லன்னு ஒத்த கால்ல நிக்கிறார்...மத்த

எல்லரும் வந்து நியுட்டன் அவுட்டுன்னு சொல்றாங்க..

அதுக்கு ஒன்னு சொன்னரு பாருங்க...



நான் இப்போ நிக்கிறது 1 ஸ்கொயர் மீட்டர் அளவுள்ள ஒரு சதுரம்.அதனால இப்பொ நான்
நியுட்டன்/ஸ்கொயர் மீட்டர்..1 நியுட்டன்/ஸ்கொயர் மீட்டர் அப்டிங்கறது 1

பாஸ்கல்..அதனால நான் இப்போ பாஸ்கல்..அப்ப பாஸ்கல் தான அவுட்டு

அப்படின்னாறாம்.

Source : http://ennudannaan.blogspot.com/2008/11/blog-post_5593.html

Comments