வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்
இளமையிலே முதுமையா?
ஆக்ஸிஜனுக்கு அடுத்து நாம் வாழ்வது தண்ணீரால்தான். எண்பது, தொண்ணூறு கிலோ எடை கொண்ட ஒருவரின் உடலில் பத்து காலன் தண்ணீர் இருக்கிறது. இந்தத் தண்ணீர் அளவு குறைந்ததால் முதலில் மூளையில் குழப்பம் ஏற்படும். மன அழுத்தம் ஏற்படும்போது நான்கு டம்ளர் அருந்தினால் உடனடியாக மனம் அமைதி அடையும். இதேபோல தற்காலிகமாகப் பசியை அடக்கவும் நான்கு டம்ளர் தண்ணீர் போதும்.
குடி தண்ணீரைக் குறைவாக அருந்தினால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.
நுரையீரல்களும் தோல் பகுதியும் தண்ணீரை ஆவியாக்கிக் கொண்டே இருக்கின்றன. எனவே, தினமும் ஏழு அல்லது எட்டு டம்ளர்கள் சுடவைத்து ஆறிய தண்ணீர் அருந்துங்கள். ஆரோக்கியம் தொடரும். நுரையீரல்கள் நன்கு சுவாசிப்பதால் மன அமைதி கிடைக்கும். தோலில் வறட்சி ஏற்படாது. அழகாகத் தோற்றமளிக்கலாம். ஆரோக்கியம் தொடரும். முகத்தில் சுருக்கம் விழுவது உடலின் செல்களில் நீர் குறைந்துள்ளதின் அடையாளம்தான்.
கைக்குழந்தைகள் சரியான அளவு குடி தண்ணீர் இன்றியே இருக்கின்றனர். அவர்களின் உடலில் உடனுக்குடன் நீர் குறைகிறது. இந்த உண்மையை அறியாத அம்மாக்கள் கைக்குழந்தைகளுக்கு பாலோ தண்ணீரோ தொடர்ந்து தராமல் தாகத்தால் அவர்களை இறக்க வைக்கின்றனர்.
அதிகமாக வியர்ப்பதும், உடலில் தண்ணீர் அளவு குறைவாகவோ இருக்கும். இவர்களும் நன்கு தண்ணீர் அருந்த வேண்டும்.
உயிரணுக்கள் சரிவர வேலை செய்யவும், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கவும் தண்ணீரே மிகவும் உதவுகிறது. இரத்தத்தில் நீரின் அளவு குறையும்போது இரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படவும் வழிவகை ஏற்படுகிறது.
தேநீர், காப்பி, பீர் சாப்பிட்ட பிறகும், அடிக்கடி இவற்றை அருந்துபவர்களும் உடலில் உள்ள நீரை அகற்றுகின்றனர். இதனால் நாக்கு வறட்சியும், முகத்தில் சுருக்கமும் ஏற்படும். இவர்களும் நன்கு தண்ணீர் அருந்தலாம்.
இதயம், சிறுநீரகம், கல்லீரல் கோளாறு உள்ளவர்களுக்கு நாக்கு வறட்சி அதிகம் இருக்கும். உடலில் நீர்க்குறைவதால்தான் இவர்கள் தண்ணீர் நிறைய அருந்துகின்றனர். இவர்கள் வெள்ளரிக்காய், தக்காளி, அன்னாசி, பப்பாளி இவற்றின் மூலம், உடல் செல்களுக்கு நன்கு நீர்ச்சத்துக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் 7.8 டம்ளர் தண்ணீரையே இவர்கள் அருந்திக் குணம் பெறலாம்.
மின்பிரிப்பு முறையில் ஒவ்வொரு செல்லுக்கும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இரத்த ஓட்டத்த்தில் தண்ணீர் குறைவாக இருந்தால் போதுமான அளவு செல்களுக்கு தண்ணீர் விநியோகம் கிடைக்காது. இதனால் இளமையிலேயே முதுமையான தோற்றம் ஏற்படும். அதற்கு ஏற்ப தோலில் வறட்சியும் சுருக்கமும் ஏற்படும்.
பழங்கள், காய்கறிகளில் உள்ள தண்ணீர், உடலில் தண்ணீர் அளவு குறையாமல் பார்த்துக் கொள்கிறது. தக்காளிச்சாறு எப்படிப்பட்ட தாகத்தையும் உடனடியாகத் தீர்த்து எல்லா செல்களுக்கும் தண்ணீர் கிடைக்கச் செய்கிறது. நன்கு தண்ணீர் அருந்துங்கள். பழங்களும் நன்கு சேருங்கள். ஆரோக்கியத்தை இளமையோடு நீட்டியுங்கள்.
Comments
Post a Comment
கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!
use tamileditor.org for post you comments in TAMIL.