அரசியல் கிரிமினல்கள் வேண்டாம்!!

கருத்து சுதந்திரம் என்பது பெயரளவில் மட்டும் உள்ளது. அரசியல்வாதிகளைப் பற்றிக் கருத்துத் தெரிவித்தாலே விளைவுகள் எப்படியிருக்கும் என்பது யாவருக்கும் தெரியும். நிலைமை இவ்வாறிருக்க, அவர்களைப் பற்றி யாரிடம் கேட்பது? இத்தளத்திடம் கேட்கலாம். வீட்டுக்கு ஆசிடோ, ஆட்டோவோ வராது!

பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள், நடத்தைகளைப் பற்றி அறிய உதவும் இணைய தளம். நல்ல முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள தளமும் கூட. சமீபத்திய செய்திகளும் கிடைப்பது , கூடுதல் சிறப்பு.

கிரிமினல்கள் வேண்டாம்!
இந்தத் தளத்தின் நோக்கம், வரும் பொதுத்தேர்தலில் கட்சிகள் கிரிமினல் பின்னணி உடைய வேட்பாளர்களை நிறுத்தக் கூடாது என்று நிர்ப்பந்திப்பது. தகவல் தொடர்புக்கு எத்தனை வழிகள் உண்டோ அத்தனை வழிகளிலும் இந்தச் செய்தியை சென்றடையச் செய்வது.

2004 பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 20 சதவிகித வேட்பாளர்கள் மேல் வழக்கு இருந்தது. சில வட மாநிலங்களில், குற்றவாளிகள்தான் ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கிறார்கள். பெரும்பாலான மாநிலங்களின் நிலை இதுவே. இதுபோன்ற ஏராளமான விவரங்கள் கிடைக்கின்றன. 

கிரிமினல் வேட்பாளர்களை நிறுத்துவதில் தமிழகத்துக்கு 7 ஆம் இடம். இந்த முன்னேற்றத்துக்கும் நாங்கள் தான் காரணம் என்று கழகங்கள் அறிக்கைச் சண்டையிட்டால், அடியேன் பொறுப்பல்ல!

Comments