வாக்களியுங்கள்!!! அல்லது வாக்களியுங்கள் 49 (ஒ)


இப்போது தேர்தல் நேரம் என்பதால் இந்த பதிவை வெளியிடுவது மிகவும் அவசியம் என கருதுகிறேன். நம் இந்திய அரசியல் சட்டம் நன்றாகவே உள்ளது. ஆனால் அவை நமக்கு சரிவர தெரியாததே இன்றைய அத்தனை குளருபடிக்கும் காரணம். திரு சேஷன் அவர்கள் தேர்தல் ஆணையராக இருந்தபோதுதான் தேர்தல் ஆணையம் என்றால் என்ன? அதற்கு இவ்வளவு அதிகாரம் உண்டா? என நமக்கெல்லாம் தெரிந்தது.

seshan

திரு சேஷன் அவர்களுக்கு முன்பிருந்த அத்தனை தேர்தல் ஆணையர்களும் ஆளும் கட்சியின் கை பாவைகளாகவே இருந்தனர்.தன் அதிகாரங்களை பயன்படுத்த தொடங்கியதுமே எல்லா அரசியல்வாதிகளுமே ஒன்று சேர்ந்து திரு சேஷன் அவர்களின் செயல்பாடுகளை தடுக்க எண்ணி, அரசியல் சட்டத்தை மாற்றி மேலும் இரண்டு ஆணையர்களை நியமித்து தங்களின் அதி புத்திசாலிதனத்தை நிருபித்தனர்.

இன்றும் தேர்தல் சம்பந்தமான ஒரு நல்ல சட்டம் இருக்கிறது. அதை இப்போது பார்க்கலாம்.
சட்டம் 1969 பிரிவு "49-0". இந்த சட்டத்தின் படி ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் நல்லவர்கள் இல்லையெனில் அவர்களை களையெடுக்க வாக்காளர்களான நமக்கு அதிகாரம் உண்டு.
உதாரணமாக எதாவது ஒரு தொகுதியை எடுத்துக்கொள்வோம். அத்தொகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளரும் நல்லவர் இல்லையென வைத்துக்கொள்வோம். நாம் என்ன செய்யலாம். நம் வாக்கு சாவடிக்கு சென்று நம் அடையாளத்தை காண்பித்து விரலில் மை அடையாளம் வைத்தபின் சம்பந்தபட்ட வாக்கு சாவடியின் அதிகாரியிடம் நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என சொன்னால் நம் வாக்கு அத்தனை வேட்பாளர்களுக்கும் எதிரானதாக எடுக்கப்படும்.

சரி அதனால் என்ன நன்மை என்று பார்போம்.

ஒரு குறிப்பிட்ட தொகுதியில் ஒரு வேட்பாளர் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெய்கிறார் என வைத்துகொள்வோம். அத்தொகுதியில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்னும் வாக்கும் எண்ணப்படும் . இந்த வேட்பாளர்களுக்கு எதிரான வாக்கு ஆயிரத்தை விட கூடுதலாக இருந்தால் அத்தொகுதியின் தேர்தல் தள்ளுபடி செய்யப்பட்டு மீண்டும் அத்தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும்.

அதுமட்டுமல்ல அத்தொகுதியின் வேட்பாளர்கள் ஏற்கனவே மக்களால் நிராகரிக்கபட்டதால் மேற்கொண்டு அந்த வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இப்படி செய்து அரசியல் கட்சிகளுக்கு பாடம் புகட்டினால் கள்ளச்சாராய வியாபாரிகளையும் கட்ட பஞ்சாயத்து காரர்களையும் வேட்பாளர்களாக நிறுத்த அரசியல் கட்சிகள் விரும்பாது. மாறாக தேர்தலில் போட்டியிட நல்ல நேர்மையான வேட்பாளர்களை தெரிவு செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவர்.இப்படி நாடு முழுவதும் மக்கள் உஷார் ஆகி நேர்மை இல்லாத அரசியல் வாதிகளை களையெடுக்க தொடங்கினால் நிட்சயமாக ஒரு நாள் இந்தியா நேர்மையான அரசியல்வாதிகளை கொண்ட நாடாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

அதற்கு இப்போது நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்னும் வாக்கே தேவை. வாக்காளர்களே! உஷார்.Source : http://tamilcatholican.blogspot.com/2009/04/blog-post_09.html

Comments

 1. அட! நம்ம பதிவு இங்க....

  செல்வராஜ்

  ReplyDelete
 2. 49-O'வும்..!! கிராமங்களில் 49-O'வும்..!!
  http://wettipedia.blogspot.com/2009/04/blog-post.html

  அன்பின் சுரேஷ் குமார்,

  வாவ், அருமையான கருத்துக்கள். உண்மையில் இது வரை 49-O விற்கு ஆதரவாக மின்னணு வாக்கு இயந்திரத்தில் பட்டன் கிடையாது. இனிமேலும் வர வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இதற்கு நாடாளுமன்றத்தில் எம்.பி கள் ஓட்டு போட்டு தான் வரனும் என்றால் இந்த ஜென்மத்தில் 49-O விற்கு பட்டன் வராது. இப்போதைய நாடாளுமன்றமே திருடர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தும் காவல் நிலையத்தினை போன்றதே !!!. பின்னர் எப்படி அவர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வார்களா என்ன?


  49-O ஒரு அருமையான வழிமுறை. ஆனால் அதை நடைமுறைக்கு கொண்டுவருவதென்பது நீங்கள் குறிப்பிட்டது போல வலிக்கும் வழிமுறை தான். வாக்கு சாவடிக்கு சென்று 49-O விற்கு ஓட்டு போடப்போகின்றேன் என்று "சனியனை பனியனுக்குள் விட்டுக் கொள்ள" யாரும் தயாரில்லை. அப்ப என்னதான் பண்ணலாம் ??? யாரிடமாவது திட்டம் இருக்கா ???  with care and love,

  Muhammad Ismail .H, PHD,

  ReplyDelete

Post a Comment

கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!

use tamileditor.org for post you comments in TAMIL.

Popular posts from this blog

கலீல் ஜி(கி)ப்ரானின் - கடவுள்கள்

அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்!

MLM - பல்லடுக்கு வியாபாரம் - கவனம் தேவை...!!!???