உடல் பருமன்!!! குறைக்க ???

இதய பாதிப்பு, சர்க்கரை நோய்க்கு முக்கிய அறிகுறியே, உடல் பருமன் தான். சிறிய வயதிலேயே குண்டாகி விடும் பலருக்கு, இளம் வயதை அடையும் போதே பாதிப்பு ஆரம்பித்து விடுகிறது. நீங் கள் நாற்பது வயதை எட்டுபவரா? உங்கள் இடுப்பு சுற்றளவு 35 அங்குலம் அல்லது 90 சென்டிமீட்டரை எட்டி விட்டதா? அப்படியானால், கண்டிப்பாக உஷாராகி விடுங்கள். சர்க்கரை வியாதிக்கு அடிப்படையான உடல் பருமனை அளவிடுவதில், இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் வேறுபாடு உண்டு. இந்தியாவில் 90 செ.மீ., என்பது தான் உடல் பருமன்; சர்வதேச அளவில் இந்த அளவு 112 செ.மீ.,ஆக உள்ளது.


அடிவயிற்று கொழுப்பு!:
உடல் பருமனை அளவிடுவதில் ஒரு முக்கிய விஷயத்தை டாக்டர்கள் கவனத்தில் கொள்கின்றனர். தொந்தி பெருத்தாலும், கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதாகவோ, சர்க்கரை வியாதி வரும் என்றோ கூற முடியாது.ஆனால், அடிவயிறு பெருத்தால் தான் ஆபத்து. முதலில், வளையம் போல கோடு விழும். அதன்பின், வெளிப்படையாக அடிவயிறு பெருத்திருப்பது தெரியும். இதை தெரிந்து கொண்டால், உடனே டாக்டரிடம் போய் சோதனை செய்து கொள்வது மிக நல்லது.இந்தியர்களை பொறுத்தவரை, அடிவயிற்று கொழுப்பு அளவை வைத்தே, அவர்களுக்கு பாதிப்பை மதிப்பிட்டு விடலாம் என்று டாக்டர்கள் கருதுகின்றனர்.


ஒல்லியாக இருந்தாலும்: 
சர்வதேச அளவில் ஒல்லியாக இருப்போருக்கு உடல் பருமன் உள்ளதாக கணக்கிடப்படுவதில்லை. அதுபோல, அவர்களுக்கு கொழுப்பு உள் ளதாகவும் சொல்ல முடியாது. ஆனால், இந்தியர்களை பொறுத்தவரை, அடிவயிற்று கொழுப்பு என்பது, குண்டாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஒல்லியாக தோற்றம் உள்ளவர்களுக்கு கூட இருக்கிறது. இதனால் தான், "அடிவயிற்று கொழுப்பை வைத்து சர்க்கரை நோய் அறிகுறி கண்டுபிடிக்கப்படுகிறது' என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.


பி.எம்.ஐ., கணக்கு:
 இதுபோல, மற்ற நாடுகளுக்கும் இந்தியாவுக் கும் பி.எம்.ஐ., கணக்கிடுவதிலும் கூட வேறுபாடு உள்ளது. பி.எம்.ஐ., என்பது "பாடி மாஸ் இண்டெக்ஸ்' எனப்படுவது. சர்க்கரை வியாதி, இதய பாதிப்பை கண்டுபிடிக்க இது எளிதான அறிகுறி. ஒருவரின் எடையை அவர் உயர அளவால் வகுத்தால் வருவது தான் பி.எம்.ஐ., இந்தியர்களை பொறுத்தவரை, பி.எம்.ஐ., 23 என்பது உடல் பருமனாக கருதப்படுகிறது. அதற்கு மேல் இருந்தால் பாதிப்பு அறிகுறி என்று மதிப்பிடப்படுகிறது.


தெற்காசிய மக்களுக்கு: 
ஆசிய நாடுகளில் தெற்காசிய மக்களுக்கு தான் பி.எம்.ஐ., அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கு காரணம், அவர்களின் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை தான் என்றும் மதிப்பிடப்பட்டுள் ளது. இந்த உடல் பருமன், இதய, சர்க் கரை நோய்க்கு மட்டுமல்ல, மார் பக, குடல் புற்றுநோய்க்கும் காரணமாக அமைகிறது என்றும் இப்போது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.


மருந்து எப்போது?: 
இந்தியர் களுக்கு அடிவயிற்று சுற்றளவு 90 சென்டி மீட்டர் அல்லது, பி.எம்.ஐ., 23 ஐ தாண்டியவுடன் விழித்துக் கொள்வது மிகவும் நல்லது. அப் போது டாக்டரிடம் காட்டி, மருந்துகளை சாப்பிட ஆரம்பிப்பது, பின்னாளில் சர்க்கரை நோய் அதிகரிக்காமல் இருக்க வழி வகுக்கும். ஆசிய நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் பி.எம்.ஐ.,யில் உள்ள வேறுபாடுகளை கருத்தில் கொண்டு, உலக சுகாதார அமைப்பு, இதய, சர்க்கரை நோய்களுக்கான அறிகுறிகள், அதற்கான மருத்துவ சிகிச்சைகள், உணவு முறைகள் குறித்து புதிய வழிகாட்டு முறைகளை அறிவிக்க உள்ளது.


21 - 23 க்கு இடையே ஓகே!
சராசரியாக ஒருவருக்கு பி.எம்.ஐ.,என்பது 21க்கும் 23க்கும் இடையே இருப்பதே நல்லது. அதற்கேற்ப உடல் பராமரிப்பு அவசியம். சத்தான உணவு சாப்பிடுவது மட்டுமல்ல, உடற்பயிற்சியும் மிக முக்கியம். அப்போது தான் உடல் பருமன் வராமல் இருக்கும். இந்த அளவை பராமரிக்க இளம் வயதில் இருந்தே உணவுக்கட்டுப் பாட்டை வளர்த்துக்கொள்ள வேண் டும். அப்போது தான் முப்பது வயதை தாண்டும் போது, உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கும்.


60 சதவீதம் பேர் இந்தியாவில்:
வரும் 2010ல், உலகத்தில் உள்ள இதய நோயாளிகளில், சர்க்கரை நோயாளிகளில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் தான் இருப்பர் என்று உலக அளவில் நடத்தப்பட்ட சர்வேயில் தெரியவந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில், வானிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை ஆகிய குறைபாடுகளுடன் இன் னொரு பயமுறுத்தும் அபாயம் "ஒபிசிட்டி' எனப்படும் உடல் பருமன் தான். இந்தியாவில் இளம் வயதினரில் 30 சதவீதம் பேர் உடல் பருமனாக உள்ளனர். இதனால், எதிர்காலத்தில் இதய, சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகும் என்பது மட்டுமல்ல; இளம் வயதில் இந்த பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.


பகோடா, சமோசா வடையே காரணம்: 
நகரங்களில் இளம் வயதினர் அதிக அளவில் உடல் பருமன் பெற காரணம், அவர்கள் சாப்பிடும் மொறு மொறு சமோசா, வடை, பகோடா உணவுப்பொருட்கள் தான். சாட் உணவுகளில், எண் ணெய் சம்பந்தப்பட்ட உணவுப்பொருட்கள் தான் அதிகம் சேர்க்கப்படுகின்றன. இதுவே, இளம் வயதினருக்கு உடல் பருமன் அதிகரிக்க காரணமாகிறது.
உடல் பருமனை எளிதில் குறைக்க.. அழையுங்கள் +91 9600 600 688.. (எல்லாம் ஒரு விளம்பரம்தான்..)

Comments

Post a Comment

கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!

use tamileditor.org for post you comments in TAMIL.

Popular posts from this blog

கலீல் ஜி(கி)ப்ரானின் - கடவுள்கள்

அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்!

MLM - பல்லடுக்கு வியாபாரம் - கவனம் தேவை...!!!???