ஒரு 'குட்டி' கதையுடன்....எனது முதல் பதிவு

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

தலவருக்கு அளித்த வாக்கின் படி.. எனது முதல் பதிவு..

ஒரு 'குட்டி' கதையுடன் ஆரம்பிக்கலாம் என்று ...



ஒரு புத்த மடாலயம், குரு மிகவும் பிரசித்தி பெற்றவர். அவருக்கு பூனைகள் என்றால் மிகவும் பிரியம். அவரின் கடைசி நாட்களின் ஒரு நாள் அவரிடம் ஒரு அடிபட்ட கருப்பு பூனையை வந்தது, அவரும் அதற்கு சிகிச்சை அளித்து வளர்த்து வந்தார்.அவருக்கு அந்த பூனையை மிகவும் பிடித்திருந்ததால், தினமும் காலை நடக்கும் பயிற்சி வகுப்பின் போது அது தொல்லை செய்தாலும் அதை துரத்தவோ கட்டவோ சம்மதிக்க‌ மாட்டார்.

ஆனால், பூனையின் தொல்லையால் மாணவர்களுக்கு பயிற்சி தடை படவே அனைவரும் குருவிடம் புகார் செய்தனர்.

குருவும் மாணவர்களின் நலன் கருதி , பயிற்சி சமயத்தில் மட்டும் பூனையை கட்டிபோட சம்மதித்தார். சிறிது காலங்கழித்து அவர் இறந்து விடவே அவரது சீடர் குருவானார், ப்ழைய குருவின் மேல் உள்ள மரியாதையால் அவரும் அந்த பூனைய பயிற்சி நேரங்களில் மட்டும் கட்டி வளர்த்தார். (போதும், பூனை வளர்ந்தது)

இந்த பழக்கம் பின்னாளில் வளர்ந்து பயிற்சி சமயத்தில் கருப்பு பூனையை கட்டிப்போடுவது என்பது சடங்காகவே மாறிவிட்டது.

இதை போல்தான், நமது மதச்சடங்குகளும் அது பர்தா அணிவதானாலும் சரி, விபூதி பூசுவதானாலும் சரி, சிலுவை அணிவதானாலும் சரி.

சடங்குகள் என்பது எதற்காக உருவானதோ அந்த சூழ்நிலைகள் இன்று மாறிவிட வெறும் சடங்குகள் மட்டுமே இன்று மிச்சம், அவற்றை காப்பாற்றத்தான் இன்றைய நமது ஆற்றல் வீணடிக்கப்படுகிறது.

இந்த சடங்குகளை உருவாக்கியவர்கள் இன்று இருந்தால் அவர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் நமது இந்த சண்டைகளை.


இது எனது தாழ்மையான் கருத்து. இது எதற்கும் எதிர்பதிவல்ல( சும்மா)

அவ்ளோதானுங்கண்ணா...

Comments

  1. நல்ல பதிவு.....முதல் பதிவு!

    ReplyDelete
  2. அருணா, மிகவும் நன்றி.
    ஈர வெங்காயம... நன்றி ( உங்ககிட்ட சொன்ன விஷயம் தான்)

    ReplyDelete
  3. அட!

    ராமன் பதிவெழுதிருக்காரா!

    அட!! அடா!!!

    தொடருங்கள் நண்பா...

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. //Your comment will be visible after approval. //

    இது வேறயா!

    அதுசரி!

    ReplyDelete
  5. அன்பின் பரிசல் !!! வாழ்த்துக்களுக்கு நன்றி.. உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. எதுக்கும் எதிர்பதிவல்லன்னா, எதுக்குத் தான் எதிர்ப்பதிவு?

    ReplyDelete
  7. நல்லாருக்கு உங்க கருத்து. புத்தாண்டு வாழ்த்துக்கள்.எனக்கு கல்யாணம்.....எனக்கு கல்யாணம் என்று சந்தோசப்பாட்டு பாடியவர்தானே நீங்கள். வீட்டுக்காரம்மா நல்லா இருக்காங்களா....

    ReplyDelete
  8. தலைவரே, இது எதுக்குமே எதிர்பதிவல்ல சரியா!! ( ஆணியே பிடுங்க வேண்டாம் என்னும் வடிவேலு ராகத்தில் படிக்கவும்) :‍‍-)

    ReplyDelete
  9. கண்ணகி !! வெந்த புண்ணில வேல பாய்ச்சாதீங்க... :‍))

    ReplyDelete
  10. தங்கள் முதல் வருகைக்கு நன்றி , கண்ணகி!!

    ReplyDelete

Post a Comment

கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!

use tamileditor.org for post you comments in TAMIL.