Thursday, January 28, 2010

தமிழ் சினிமா தரும் ஐடியாக்கள்!!

தமிழ் சினிமா மூலம் கற்றுத்தந்த பாடங்கள்:

* இரட்டையரில் குறைந்தது ஒருவராவது கெட்டவரா இருப்பார்/ பிறப்பார்.

* பாம் செயலிழக்க எந்த வயரை வெட்ட வேண்டும் என்ற குழப்பமா, கவலையை விடுங்க நீங்க வெட்டர எந்த வயரா இருந்தாலும் அது கரக்ட்தான்.

* இரவிலும் விளக்குகள் அணைத்த‌ பிறகும் நீங்கள் தெளிவாக தெரிவீர்கள், என்ன கொஞம் நீலமாக இருப்பீர்கள் அவ்ளோதான் ( இதை தமிழில் தெளிவாக சொல்ல தெரியவில்லை)

* எவ்ளோ அடிவாங்கினாலும் எதிர்த்து நின்னு சண்டை போடும் நாயகன், புண்ணுக்கு மருந்து போடும் பெண் ( அதிக ப்ட்சம் நாயகியாகத்தான் இருக்கும்)
மீது எரிந்து விழுவார் , ஹும் வலிக்கிறதாம்.

* ஒரு அதிகாரி, ஒரு கேசை சீரியசாக துப்பறிய வேண்டுமா, அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.  (இது தெரியாம நம்ம அரசாங்கம் ரொம்ப தெணறுது. )

* திடீரென, நீங்கள் தெருவில் பரதனாட்டியமே ஆடினாலும் உங்களுடன் ஆடும் அனைவரும் மிகச்சரியாக ஸ்டெப்ஸ் வைப்பர்.

உங்களுக்கு தெரிஞ்சத நீங்களும் ஒரு பதிவா போடுங்க.

2 comments:

  1. வார்ப்புருவெல்லாம் கலக்கலா இருக்குது ராமா!

    ReplyDelete
  2. ஹாஹாஹா... நல்லா தான் இருக்கு இந்த ஆராய்ச்சி.

    ReplyDelete

கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!

use tamileditor.org for post you comments in TAMIL.