குழந்தைகளா ?? தொழிலாளர்கள் ??


யார்?

4 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறார்கள் கூலிக்கான உழைப்பில் ஈடுபடுவோரை குழந்தைத் தொழிலாளர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான இந்திய அரசியல் சட்டம்:
24 வது பிரிவு- 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை எந்த ஒரு தொழிற்சாலைகளை அல்லது சுரங்கத்திலோ அல்லது வேறு எந்தவிதமான ஊறு விளைவிக்கும் வேலையிலோ பணியமர்த்தக் கூடாது.
45 வது பிரிவு - 14 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்குதலை அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டிலிருந்து 10 வருட காலக்கட்டத்தில் உறுதிப்படுத்தும் வகையில் அரசு முயற்சிகள் எடுத்தல் வேண்டும்.
39 வது பிரிவு - இ - தொழிலாளர்களின் உடல்நலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது, ஆண்கள் பெண்கள் மற்றும் பிஞ்சுக் குழந்தைகள் அவமதிக்கப்படாமல் பாதுகாப்பது, அவர்களின் வயது மற்றும் உடல்வலிமைக்கு பொருத்தமில்லாத வேலைகளில் பொருளாதார நிர்பந்தத்திற்காக வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துவதைத் தடுப்பது ஆகியவற்றை உறுதிப்படுத்தும் கொள்கையை அரசு வகுக்க வேண்டும்.
39 வது பிரிவு - எஃப் - ஆரோக்கியமான முறையிலும், சுதந்திரமான சூழ்நிலையிலும், கண்ணியத்துடனும் வளர்வதற்கான வாய்ப்புகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும். தார்மீக ரீதியிலும், பொருளாதார அடிப்படையிலும் புறக்கணிக்கப்படுவதிலிருந்து குழந்தைப் பருவமும் இளமைப் பருவமும் பாதுகாக்கப்பட வேண்டும் .
தொழிற்சாலைகள் சட்டம் 1948: 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை வேலையில் அமர்த்த இந்தச் சட்டம் தடைவிதிக்கிறது.


கம்யூனிஸ்ட் அறிக்கையில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புமுறை பற்றி:
"Free education for all children in public schools. Abolition of children’s factory labour in its present form. Combination of education with industrial production."
1850 ம் ஆண்டில் இங்கிலாந்து.
source: http://arivoliiyakkam.blogspot.com/2009/02/blog-post_9363.html

Comments

Popular posts from this blog

கலீல் ஜி(கி)ப்ரானின் - கடவுள்கள்

MLM - பல்லடுக்கு வியாபாரம் - கவனம் தேவை...!!!???

வெயில் குளிர்வித்த மாலை!!